''ராகுல், மோடி வேண்டாம்... தோனி தான் அடுத்த பிரதமர்'' ட்விட்டரில் நெகிழ்ந்த ரசிகர்கள்

Updated: 22 April 2019 10:48 IST

48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி. இதனை அவரது ரசிகர்கள் "தோனி ஃபார் பிரதமர்" என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார்.

MS Dhoni For PM: CSK Captain Almost Pulls Off The Impossible, Twitter Goes Crazy
"ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்" என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  © BCCI/IPL

உலகக் கோப்பைக்கு முன்பு தோனி ரசிகர்கள் அதிக உற்சாகமடைந்துள்ளனர். நேற்று பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஆடிய தோனியின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி பந்தில் தக்கூர் ரன் அவுட் ஆகி சென்னை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. எனினும் தோனியின் ஆட்டம் ஒரு நிமிடம் ஆர்சிபியின் வெற்றியை பறிக்கும் விதமாக மாறியிருந்தது. 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அவரது ரசிகர்கள் "தோனி ஃபார் பிரதமர்" என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார். "ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்" என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

முன்னதாக 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி, கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. உமேஷ் அந்த பந்தை ஸ்லோ பாலாக வீசினார்.

கடைசி பந்து நேராக கீப்பரிடம் செல்ல தோனி மறுமுனைக்கு ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த ஷரதுல் தக்கூர் ரன் அவுட் ஆனார். இதனால் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

இது ஆர்சிபியின் மூன்றாவது ஐபிஎல் வெற்றியாகும்.  சென்னை 28-4 என்ற நிலையில் களமிறங்கிய தோனி அபாரமாக ஆடி வெற்றியை எளிதில் கொண்டு வந்தார். 

மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் தோனி கடைசி வரை தனி ஆளாக நின்று போராடினார்.

Comments
ஹைலைட்ஸ்
  • 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி
  • 48 பந்தில் 5 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் அடித்தார் தோனி
  • சிஎஸ்கே ஆர்சிபியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
கிரிக்கெட் களத்தின் வெளியிலும் சாதனை படைத்த விராத் கோலி...!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
லடாக்கில் சுதந்திர தினத்தை கொண்டாடிய தோனி!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
ராணுவத்திலிருந்து வீடு திரும்பும் தோனிக்காக காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
டி20 போட்டியில் அதிக ரன்கள்... தோனியின் சாதனையை முந்திய ரிஷப் பன்ட்!
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
வைரலாகும் தோனி பாடும் வீடியோ... எங்கே எடுக்கப்பட்டது? #FactChecked
Advertisement