கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா

Updated: 07 May 2019 18:30 IST

கேப்டன் விராட் கோலி ஒரு உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு பெங்களூரு அணியின் ஆரம்ப கால உரிமையாளரான விஜய் மல்லையா தெரிவித்துள்ள கருத்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Vijay Mallya On Virat Kohli
மல்லையா "நல்ல பேட்டிங் லைன் அப்பை கொண்ட அணி ஆனால் அது பேப்பரில் மட்டும் உள்ளது களத்தில் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். © AFP

ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக ஆடி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. இதற்காக கேப்டன் விராட் கோலி ஒரு உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு பெங்களூரு அணியின் ஆரம்ப கால உரிமையாளரான விஜய் மல்லையா தெரிவித்துள்ள கருத்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்த பதிவில் மல்லையா "நல்ல பேட்டிங் லைன் அப்பை கொண்ட அணி ஆனால் அது பேப்பரில் மட்டும் உள்ளது களத்தில் இல்லை" என்று பதிவிட்டுள்ளார். ஆர்சிபி அணியில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டோனின்ஸ், ஹெட்மேயர் ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணியை உட்டன் ஸ்பூன் என்று விமர்சித்துள்ளார்.

ஆர்சிபி அணியின் இரண்டாவது பாதி அந்த அணிக்கு சிறப்பாகவே அமைந்தது. இது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக ஆடுவோம் என்று கேப்டன் கோலி கூறியிருந்தார்.

கடைசி லீக் போட்டிக்கு பிறகு கடைசி ஏழு போட்டிகளில் 5 போட்டிகளை வென்றும், ஒரு போட்டி முடிவில்லாமலும் போனது. இது அணிக்கு தன்னம்பிக்கை அளித்துள்ளதாக கூறினார்.

ஆர்சிபி இன்னும் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோலி மேலும் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரையும் பாராட்டினார். 

ஆர்சிபி ஐபிஎல் 2019 தொடரை முதல் ஆறு போட்டிகளை தோற்று ஆரம்பித்ததே காரணமாக கூறப்படுகிறது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை ஆர்சிபி பிடித்தது.

12 வருடமாக ஆர்சிபியின் கோப்பை கனவு வெறும் கனவாக மட்டுமே உள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
Advertisement