கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!

Updated: 10 May 2019 11:15 IST

போட்டி அதே அமைதானத்தில் நடைபெறுவது டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு எதிராக வெற்றியை தொடரும்  முனைப்பில் டெல்லி அணி உள்ளது.

CSK vs DC Qualifier 2 Preview: Delhi Capitals Chase History, Face Chennai Super Kings In Bid To Reach Maiden IPL Final
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல்முறையாக நாக் அவுட் போட்டிகளில் வென்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல்முறையாக நாக் அவுட் போட்டிகளில் வென்று குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியுடனான கடைசி ஓவர் வெற்றி மூலம் டெல்லி குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டி அதே அமைதானத்தில் நடைபெறுவது டெல்லி அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சென்னை அணிக்கு எதிராக வெற்றியை தொடரும்  முனைப்பில் டெல்லி அணி உள்ளது. சென்னை மும்பையுடன் அடைந்த தோல்வியிலிருந்து மீள சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை டெல்லி அணி மட்டும் தான் ஐபிஎல் இறுதி போட்டியில் ஆடாத அணி.

டெல்லி லீக் போட்டிகளில் சென்னையிடம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் டெல்லியின் பெரிய ஊக்கமாக ரிஷப் பன்ட் இருக்கிறார். 21 பந்தில் 49 ரன்கள் அடித்து வில்லியம்சனின் சன்ரைசர்ஸின் கோப்பை கனவை தகர்த்தார்.

பன்ட்டை உலகக் கோப்பை அணிக்குள் சேர்க்காதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷாவின் ஆட்டமும் அணிக்கு கைகொடுப்பது டெல்லிக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. போல்ட், இஷாந்தின் வேகம் கைகொடுக்கும், ராபாடாவுக்கு பதில் இடம்பெற்றுள்ள கீமோ பால் அவர் இடத்தை நிரப்புகிறார்.

அமித் மிஸ்ராவின் அனுபவம் டெல்லிக்கு அதிகமாகவே கைகொடுக்கிறது. தாஹிர், ஹர்பஜன் சுழல் டெல்லிக்கு சவாலாக இருக்கும். 

சென்னை 3 கோப்பைகளை வென்றதும், 4 ஃபைனல்களில் ஆடியதும் அழுத்தமான போட்டிகளில் ஆடுவதற்கு சென்னைக்கு எளிதாக இருக்கும். 

சென்னையின் பேட்டிங் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும் என்று தோனி சென்ற போட்டியிலேயே கூறியிருந்தார்.

வாட்சனின் ஃபார்ம் சென்னைக்கு கவலையளிக்கும் விதமாகவே உள்ளது.

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

டெல்லி: ஷ்ரேயாஸ், ப்ரித்வி ஷா, தவான்,பண்ட், இங்ராம், கீமோ பால், அக்சர், ராகுல் திவேதியா, அமித் மிஸ்ரா, ரபாடா, இஷாந்த், விஹாரி, அன்குஷ், கிறிஸ் மாறிஸ், ஷெர்ஃபேன், ஜலஜ், சந்தீப் லாமிச்சனே, ட்ரெண்ட் போல்ட், அவேஷ்கான், நதா சிங், பண்டரு, காலின் முன்ரோ, மன்ஜோத் கல்ரா.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
ஒரே முனையில் வாட்சன், டூப்ளெசிஸ்... ரன் அவுட் செய்ய தவறிய டெல்லி வீரர்கள்!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
டெல்லியை வென்று IPL இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை!!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
கிங் ஆஃப் ப்ளே ஆஃப் சிஎஸ்கேவை சமாளிக்குமா டெல்லி கேப்பிட்டல்ஸ்!
Advertisement