டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!

Updated: 03 May 2019 19:13 IST

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடவுள்ளன. சனிக்கிழமை ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன.

DC vs RR Preview: Delhi Capitals Seek Top Two Finish, Rajasthan Royals Hope For Miracle
டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் சென்ற முறை மோதிய போது ரஹானே சதமடித்தார். © BCCI/IPL

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஆடவுள்ளன. சனிக்கிழமை ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளும் மோதவுள்ளன. சொந்த மண்ணில் டெல்லி அணி அபாரமான ஃபார்மில் உள்ளது. டெல்லி வெற்றியோடு முதல் இரண்டு அணிகளில் ஒன்றாக அடுத்த சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் இந்த போட்டியை வென்றால் ராஜஸ்தான் ப்ளே ஆஃப் செல்ல ஒரு வாய்ப்பும் உள்ளது. பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோற்று. இன்றைய போட்டியை ராஜஸ்தான் வென்றால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து விலகியுள்ளார். ரபாடாவும் அணியிலிருந்து விலகியுள்ளார்.

ஆர்சிபி போட்டிக்கு பிறகு அனைவரது பார்வையும் ஷ்ரேயாஸ் கோபால் மீது திரும்பியுள்ளது. விராட், டிவில்லியர்ஸ் போன்றவர்களை வீழ்த்தி தன் பக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். டெல்லியை பொறுத்தமட்டில் தவான், பன்ட் ஆகியோரது ஃபார்மும் அபாரமாக உள்ளது. 

சென்ற முறை இரு அணிகளும் மோதிய போது ரஹானே சதமடித்தார். ஆனால், பன்ட் 36 பந்தில் 78 ரன்கள் விளாசி டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெறி பெற வைத்தார். 

அணி விவரம்:

டெல்லி: ஷ்ரேயாஸ், ப்ரித்வி ஷா, தவான்,பன்ட், இங்ராம், கீமோ பால், அக்சர், ராகுல் திவேதியா, அமித் மிஸ்ரா, ரபாடா, இஷாந்த், விஹாரி, அன்குஷ், கிறிஸ் மாறிஸ், ஷெர்ஃபேன், ஜலஜ், சந்தீப் லாமிச்சனே, ட்ரெண்ட் போல்ட், அவேஷ்கான், நதா சிங், பண்டரு, காலின் முன்ரோ, மன்ஜோத் கல்ரா.

ராஜஸ்தான்: ரஹானே, தவால் குல்கர்ணி, ஸ்டூபர்ட் பின்னி, ஸ்டீவன் ஸ்மித், பட்லர், வருண் ஆரோன், உனக்டட், ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன், மனன் வோரா, பிரகாஷ் சோப்ரா, ஆஷ்டன் டர்னர், இஸ் சோதி , க்ருஷ்ணப்பா கெளதம், ராகுல் திரிபாதி, ஷ்ரேயாஸ் கோபால், லியம் லிவிங்ஸ்டான், ஷஷாங்க் சிங், மஹிபால் லோமோர், ரஞ்சனே, தாமஸ், ஆர்ச்சர், ரியான் பராஹ், அர்ய்மன் பிர்லா, சுதேசன் மிதுன்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
Advertisement