ஐபிஎல் 2019 : சன்ரைசர்ஸை பிரியும் வார்னரின் உருக்கமான பதிவு!

Updated: 30 April 2019 14:58 IST

32 வயதான வார்னர் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு மே 2ம் தேதி செல்ல வேண்டும் என்பதால், இந்த போட்டியோடு அவர் ஆஸ்திரேலியா செல்கிறார்.

David Warner Bids Adieu To IPL 2019 With Emotional Message
டேவிட் வார்னர் அவரது 2019 ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டத்தில் நேற்று ஆடினார். © AFP

டேவிட் வார்னர் அவரது 2019 ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டத்தில் நேற்று ஆடினார். 32 வயதான வார்னர் ஆஸ்திரேலிய அணியின் உலகக் கோப்பை பயிற்சி முகாமுக்கு மே 2ம் தேதி செல்ல வேண்டும் என்பதால், இந்த போட்டியோடு அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். கடைசி போட்டியில் 56 பந்தில் 81 ரன்கள் விளாசி சிறப்பாக விடைபெற்றார். இவரது ஆட்டத்தால் சன்ரசர்ஸ் கிங்ஸ் லெவனை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதற்காக வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள், அணியினர், அனைவருக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான் பதிவை பதிவிட்டுள்ளார். அது அனைவரையும் நெகிழ வைத்தது.

ஐபிஎல் 2019 தொடரில் 12 போட்டிகளில் ஆடி 692 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

அடுத்த இடத்தில் கே.எல் ராகுல் 520 ரன்களுடனும், ரஸல் 482 ரன்களுடனும் உள்ளனர். 

வார்னர், இந்த தொடரில் 8 அரைசதங்களையும், ஒரு சதத்தையும் அடித்துள்ளார். அவரது சராசரி 69.20 , ஸ்ட்ரைக் ரேட் 143.86.

வார்னர் அதிரடியால் சன்ரைசர்ஸ் முதல் 6 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டேவுடன் 82 ரன்கள் பாட்ட்னர்ஷிப்பையும் வார்னர் தந்தார். கிங்ஸ் லெவன் கேப்டன் அஷ்வின் 16வது ஓவரில் வார்னரை வெளியேற்றினார். 

சன்ரைசர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது, அதன்பின் ஆடிய கிங்ஸ் லெவன் ராகுலின் அதிரடியால் ஸ்கோரை நெருங்கினாலும், ராகுல் 79 ரன்னில் வெளியேற 20 ஓவரில் 167 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

Comments
ஹைலைட்ஸ்
  • டேவிட் வார்னர் அவரது 2019 ஐபிஎல் தொடரின் கடைசி ஆட்டத்தில் நேற்று ஆடினார்
  • கடைசி போட்டியில் 56 பந்தில் 81 ரன்கள் எடுத்து விடைபெற்றார் வார்னர்
  • சன்ரசர்ஸ் கிங்ஸ் லெவனை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட்! இலங்கையை தெறிக்க விட்ட மேக்ஸ்வெல்!!
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
The Hundred Draft: இங்கிலாந்தில் நடக்கும் புது கிரிக்கெட் தொடரில் ஸ்மித், வார்னர்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"பந்தை சேதப்படுத்த பொருள் உபயோகித்தார்" - வார்னர் குறித்து கூறிய அலெஸ்டர் குக்
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
"மோசக்காரர்" என்று கூறிய ரசிகருக்கு வார்னரின் வித்தியாசமான பதில்!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
ஆஷஸ் 2019: மோசமான ஃபார்மில் வார்னர்... கலாய்த்த ஐசிசி!
Advertisement