சி.எஸ்.கேவை சேப்பாக்கத்தில் அடக்குமா மும்பை இந்தியன்ஸ்!

Updated: 26 April 2019 13:06 IST

மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை அணி ஏற்கெனவே இந்த தொடரில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

Preview: Chennai Super Kings Host High-Flying Mumbai Indians At Chepauk Fortress
கேப்டன் தோனி அபாரமான ஃபார்மில் இருப்பதும் கூடுதல் பலமாகியுள்ளது. 10 போட்டிகளில் 104 சராசரியுடன் 314 ரன்களை குவித்துள்ளார். © BCCI/IPL

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் வென்று ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை அணி ஏற்கெனவே இந்த தொடரில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள சென்னையை 3ம் இடத்தில் உள்ள மும்பை சந்திக்கவுள்ளது. 

12 புள்ளிகளுடன் மும்பை அணி 3வது இடத்தில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளை வென்றால் மும்பை ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்துவிடலாம். 

இதுவரை 27 முறை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதில் இதில் மும்பை 15 முறையும், சென்னை 12 முறையும் வென்றுள்ளன. 

ஷேன் வாட்சனின் அதிரடியால் ஹைதராபாத் அணியை வென்ற உத்வேகத்தில் சென்னை சொந்த மண்ணில் களமிறங்குகிறது. 

கேப்டன் தோனி அபாரமான ஃபார்மில் இருப்பதும் கூடுதல் பலமாகியுள்ளது. 10 போட்டிகளில் 104 சராசரியுடன் 314 ரன்களை குவித்துள்ளார்.

மும்பையின் பேட்டிங் பெரிதும் டிகாக் மற்றும் ஹர்திக்கை நம்பியே உள்ளது. இரு சம பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணி விவரம்:

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித், டிகாக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, யுவராஜ்சிங், பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், பென் கட்டிங், பய்ஸ்வால், இஷான் கிஸன், சித்தேஷ் லட், லீவிஸ், மயன்க் மார்கண்டே, மெக்லென்ஹன், அல்ஸாரி, பெகன்ட்ராஃப், அன்குல் ராய், பரிந்தர் சரம், சலாம், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ்.

சிஎஸ்கே: தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

Comments
ஹைலைட்ஸ்
  • 11 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று முதலிடத்தில் உள்ளது சென்னை
  • மும்பை அணி மூன்றாவது இடத்தில் உள்ளது
  • மோதிய 27 போட்டிகளில் மும்பை 15 முறையும், சென்னை 12 முறையும் வென்றுள்ளன
தொடர்புடைய கட்டுரைகள்
"தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" - பிளெம்மிங்
"தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது" - பிளெம்மிங்
"ஹிட்மேன் ரோஹித் இனி அவெஞ்சர்ஸில் இணையலாம்" - ஹர்திக் பாண்ட்யாவின் வைரல் ட்விட்
"ஹிட்மேன் ரோஹித் இனி அவெஞ்சர்ஸில் இணையலாம்" - ஹர்திக் பாண்ட்யாவின் வைரல் ட்விட்
"தோனி இல்லாததால் எளிதாக ஜெயித்தோம்" - ரோஹித் ஷர்மா!
"தோனி இல்லாததால் எளிதாக ஜெயித்தோம்" - ரோஹித் ஷர்மா!
ஐ.பி.எல். 2019 : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!! #Highlights
ஐ.பி.எல். 2019 : சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல்!! #Highlights
சென்னையை வீழ்த்த கடும் பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி!
சென்னையை வீழ்த்த கடும் பயிற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி!
Advertisement