ஆர்சிபி நோபால் சர்ச்சை... விதி முறையை திருத்த சொல்லும் வீரர்கள்!

Updated: 29 March 2019 19:53 IST

ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Cricketers Slam Umpiring Blunder During RCB vs MI IPL Match, Suggest Rule Change
போட்டி  முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது. © Twitter

மும்பை மற்றும் பெங்களூரு இடையேயான ஐபிஎல் போட்டியில் கடைசி பந்தை நடுவர் ரவி நோபால் என அறிவிக்காததால் ஆர்சிபி தோல்வியை சந்திக்கும் சூழல் உருவானது. போட்டி  முடிந்து மும்பை வெற்றி என்று அறிவிக்கப்பட்டதும், மலிங்கா வீசிய பந்து தெளிவாக நோபால் என்பது உறுதியானது. 

கோலி மைதானத்தின் பெரிய திரையில் நோபாலை பார்த்து ஆத்திரமடைந்தார். "இது மிகப்பெரிய தவறு" என தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆட்டம் முடிந்து பரிசளிப்புக்கு முன் இயன் பிஷப்பின் பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"நாங்கள் ஐபிஎல் அள‌வில் போட்டிகளை ஆடுகிறோம். ஏதோ க்ளப் கிரிக்கெட் ஆடவில்லை. கடைசி பந்தில் நோபால் வழங்காதது தவறான விஷயம். நடுவர்கள் தங்கள் கண்களை அதிக விழிப்புடன் வைத்திருக்க வேண்டும். அதுவும் இவ்வளவு பெரிய நோபாலை தவறவிட்டுப்பது ஏற்கமுடியாதது. இது போட்டியை தலைகீழாக மாற்றியது" என்றார் கோலி

கடைசி பந்தை சிவம் துபே எதிர்கொண்டார். அந்த பந்து நோபால் என்றால் அதில் ஒரு ரன் ஓடியதால் ஒரு பந்தில் 5 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கும். டிவில்லியர்ஸ் அபாரமாக 41 பந்தில்; 71 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் அவர் ப்ரீ ஹிட்டில் ஆர்சிபியை வெற்றி பெற வைத்திருக்க வாய்ப்பு அதிகம். 

நடுவரின் தவறை ரோஹித் ஷர்மாவும் விமர்சித்தார். "நான் எல்லைக்கோடை தாண்டி பிறகே இது நோபால் என அறிந்தேன். பும்ரா வீசிய பந்திலும் தவறாக ஒரு வைடு வழங்கினார்" என குற்றம் சாட்டினார். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தனது இரண்டாவது போட்டியிலும் தோற்றது.

"இந்த சம்பவத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். இதுவே கடைசி நிகழ்வாக இருக்க வேண்டும்" என்று பல முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்றாவது நடுவரை உடனடியாக அணுகினாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் கூறியுள்ளனர். இது போன்ற சூழலுக்கு விதியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • மும்பை இந்தியன்ஸ் ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
  • கடைசி பந்தில் 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது ஆர்சிபி
  • பேட்டிக்கு பதிலளித்த கோலி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்
தொடர்புடைய கட்டுரைகள்
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலி மற்றும் ஆர்சிபியை விமர்சித்த விஜய் மல்லையா
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியுடன் வாக்குவாதம் செய்த நடுவர் மீது விசாரணை!
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
கோலியின் டி20 கேப்டன்ஸி பற்றி கூறும் டேனியல் வெட்டோரி
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆர்சிபியிடம் தோற்ற சன் ரைசர்ஸை மீம்ஸ்களால் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ஐதராபாத்? - பெங்களூருவுடன் பலப்பரீட்சை!!
Advertisement