கூல் தோனி... க்ளாஸ் ரோஹித்... ஐபிஎல் கோப்பையை ஏந்த போவது யார்?

Updated:12 May 2019 19:02 IST

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவுள்ளன.

Chennai Super Kings And Mumbai Indians To Fight For Supremacy In Clash Of IPL Giants
மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி எட்டு முறை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஆடியுள்ளது. © BCCI/IPL

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டியில் ஆடவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. குவாலிஃபையர் 1ல் சென்னையை மும்பை அணி வீழ்த்தியது.  இரு அணிகளும் 3 முறை பட்டம் வென்றுள்ள நிலையில் நான்காவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் தயாராகி வருகின்றன. 

புள்ளிவிவரங்கள் இரு அணிகளுக்கும் சமபலம் வாய்ந்ததாகவே உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. மும்பை அணி தான் ஆடிய நான்கு இறுதி போட்டிகளில் மூன்றை வென்றுள்ளது. அதில் இரண்டு சென்னை அணிக்கு எதிரானது. 

மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி எட்டு முறை ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் ஆடியுள்ளது. இரண்டு ஆண்டு தடைக்குபின் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடருக்கு திரும்பிய சென்னை சாம்பியன் பட்டம் பெற்றது. 

இன்றைய போட்டி ஐபிஎல் தொடரின் பரமை வைரிகளாக பார்க்கப்படும் சென்னை மும்பை அணிகளுக்கு மேலும் ஒரு சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடருக்கு பிறகு உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் வார்னர் , ஸ்மித் தடைக்கு பின் அதிரடியாக அணிக்கு திரும்பியுள்ளனர்.

வார்னர் அபாரமாக ஆடி 692 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, ராகுல் ஆகியோரும் சிறப்பாக ஆடி தங்கள் தேர்வை நியாயப்படுத்தியுள்ளனர்.

ஆன்ட்ரூ ரஸலின் அதிரடி கொல்கத்தா அணியை எளிதாக போட்டிகளில் வெல்ல வைத்தது. அஷ்வினின் மான்கடிங் மற்றும் தோனி களத்தில் கோபப்பட்டு நடுவரிகளிடம் வாக்குவாததில் ஈடுபட்டது என பல விஷயங்கள் சர்ச்சையாகின.

சென்னைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கபோவது சுழற்பந்துவீச்சாளர்களே தாஹிர், ஹர்பஜன், ஜடேஜா அபாரமாக பந்துவீசியுள்ளனர். இருப்பினும் தீபக் சஹார் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே:

தோனி, ரெய்னா, ஜடேஜா, ஹர்பஜன், வாட்சன், ப்ராவோ, முரளி விஜய், கரண் ஷர்மா, கேதர் ஜாதவ், ராயுடு, வில்லி, தாஹிர், டூப்ளெஸிஸ், சஹார், சாம் பில்லிங்ஸ், மோஹித் ஷர்மா, ஷரதுல் தாக்கூர், ஷோரே, சாண்ட்னர், மோனு குமார், பிஷ்னோய், ஜெகதீசன், ருதுராஜ் , ஆசிப்

மும்பை இந்தியன்ஸ்: 

ரோஹித், டிகாக், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, யுவராஜ்சிங், பொலார்ட், மலிங்கா, ராகுல் சஹார், பென் கட்டிங், பய்ஸ்வால், இஷான் கிஸன், சித்தேஷ் லட், லீவிஸ், மயன்க் மார்கண்டே, மெக்லென்ஹன், அல்ஸாரி, பெகன்ட்ராஃப், அன்குல் ராய், பரிந்தர் சரம், சலாம், ஆதித்யா தாரே, சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ்.

  Comments
  தொடர்புடைய கட்டுரைகள்
  ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
  ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
  ''ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப் எல்லாம் இல்லை.. ஆனால் கோப்பை உள்ளது'' மும்பை பயிற்சியாளர் ஜெயவர்த்தனே!
  வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
  வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
  ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
  ஐபிஎல் இறுதிப்போட்டி: க்ருணாலை வீட்டுக்கு அனுப்பிய தாக்கூரின் வாவ் கேட்ச்!
  ''இனிதான் சிறப்பான சம்பவம் காத்திருக்கு'' பும்ராவை புகழ்ந்த சச்சின்!
  Advertisement