ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!

Updated: 08 April 2019 10:15 IST

இது ஒன்றும் ஐபிஎல் தொடரில் புதிய சம்பவமில்லை. இந்த தொடரிலேயே பலமுறை இப்படி நடந்திருக்கிறது

RR vs KKR: Ball Hits Stump But Bails Don
சனிக்கிழமையன்று தோனி செய்த ரன் அவுட்டிலிருந்து கிங்ஸ் லெவன் வீரர் ராகுல் தப்பினார்.  © BCCI/IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அதிர்ஷ்டமே இல்லை. கொல்கத்தா அணியுடனான நேற்றைய போட்டியில் அந்த அணியின் துவக்க வீரர் கிறிஸ் லின் பேட்டிங் செய்யும் போது தவல் குல்கர்னி வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது. ஸ்டெம்ப் லைட் எரிந்ததும் குல்கர்னி துள்ளி குதித்தார். ஆனால் பெயில்ஸ் கீழே விழாமல் அப்படியே பந்து நகர்ந்து பவுண்டரிக்கு சென்றது.

இதனை அம்பயர் விதிகளின் படி அவுட் இல்லை என்று கூற, லின் பேட்டிங்கை தொடர்ந்தார். இது ஒன்றும் ஐபிஎல் தொடரில் புதிய சம்பவமில்லை. இந்த தொடரிலேயே பலமுறை இப்படி நடந்திருக்கிறது. 

இதனை டிவிட்டரில் ஃபெவிகால் வைத்த பெயில்ஸ்கள் என்று நெட்டிசன்கள் கேலி செய்தனர்.

சனிக்கிழமையன்று தோனி செய்த ரன் அவுட்டிலிருந்து கிங்ஸ் லெவன் வீரர் ராகுல் தப்பினார். 

மார்ச் 31 அன்று நடந்த இதே ராஜஸ்தான் ராயல்ஸுக்கு  எதிரான போட்டியில் சி.எஸ்.கே பேட்டிங்கின் போது தோனி ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆர்ச்சர் வீசிய பந்தில் இதே சம்பவம் நிகழ்ந்தது. 

நேற்றைய போட்டியில் லின் 50 ரன்களை குவித்தார். இதன் மூலம் 37 பந்துகள் மீதமிருந்த நிலையில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா.

Comments
ஹைலைட்ஸ்
  • கிறிஸ் லின் அடித்த பந்து ஸ்டம்ப்பில் பட்டும் அவுட் இல்லை என கூறப்பட்டது
  • பெயில்ஸ் கீழே விழாமல் அப்படியே பந்து நகர்ந்து பவுண்டரிக்கு சென்றது
  • டிவிட்டரில் ஃபெவிகால் வைத்த பெயில்ஸ்கள் என்று நெட்டிசன்கள் கேலி செய்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
''லைட் எரிந்தாலே அவுட்'' ஐபிஎல் சர்சசைக்கு தீர்வு சொல்லும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ஸ்டெம்ப்ல பட்டுச்சு... லைட் எரிஞ்சுச்சு... ஆனா அவுட் இல்ல!
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
கொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates
Advertisement