ராஜஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து ரஹானே நீக்கம்.. புதிய கேப்டன் ஸ்மித்

Updated: 20 April 2019 15:49 IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Ajinkya Rahane Removed As Rajasthan Royals Skipper, Steve Smith Replaces Him
புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் ஆர்சிபி அணியுடன் கடைசி இடத்தை பகிர்ந்துள்ளது. © BCCI/IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அஜின்க்யா ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரே இந்த தொடர் முழுவதும் கேப்டனாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல் தொடரில் சாதிக்க தவறி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் ஆர்சிபி அணியுடன் கடைசி இடத்தை பகிர்ந்துள்ளது. ரஹானே நீக்கம் குறித்து ராஜஸ்தான் அணி அளித்துள்ள விளக்கத்தில் ''ரஹானே தலைமையில் ராஜஸ்தான் சென்ற முறை ப்ளே ஆஃப் சென்றது. இந்த தொடரில் திரும்ப அணி ஃபார்முக்கு திரும்ப புதிய அணுகுமுறை தேவை என்பதால் ஸ்மித் கேப்டனாக்கப்பட்டுள்ளார்" என்று கூறியுள்ளது.

ஸ்டீவ் ஸ்மித், ராஜஸ்தான் அணியை நன்கு அறிந்தவர் என்பதால் கேப்டன்ஸியில் சிக்கல் இருக்காது என்றும், அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்றும் கூறியுள்ளது.

ரஹானே தலைமையில் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது என்றும் அந்த அணி ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் அணி நிர்வாகம் கூறியுள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சை காரணமாக அணியிலிருந்து ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்மித்துக்கு பதிலாக ரஹானே சென்ற சீசனில் கேப்டனாக்கப்பட்டார்.

மே1ம் தேதி முதல் ஸ்மித் ஐபிஎல் தொடரில் ஆடமாட்டார் என்பதால் மீண்டும் ரஹானே கேப்டனாகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அதேபோல ராஜஸ்தான் அணியில் பட்லர் இங்கிலாந்து திரும்பியுள்ளார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் அணியிலிருந்து விலகி இங்கிலாந்து சென்றுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • கேப்டன் பதவியிலிருந்து அஜின்க்யா ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்
  • ரஹானே தலைமையில் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது
  • ராஜஸ்தான் அணியில் பட்லர் இங்கிலாந்து திரும்பியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
"இதுதான் சிறந்த
"இதுதான் சிறந்த 'ரிலே கேட்ச்' " - ராஜஸ்தான் ராயல்ஸ் பதிவிட்ட வீடியோ!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
பன்ட் பொறுப்பான ஆட்டம்! ராஜஸ்தானை வென்று 2-வது இடத்துக்கு முன்னேறியது டெல்லி!!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
டெல்லி முதலிடத்துக்காகவும், ராஜஸ்தான் ப்ளே ஆஃப்புக்காகவும் மோதல்!
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
ராஜஸ்தான் அணியை தோற்கடிக்குமா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு?
Advertisement