ஷமி பந்தை ஒற்றை கையால் சிக்ஸருக்கு விரட்டிய ஏபி டிவில்லியர்ஸ்!

Updated: 25 April 2019 17:16 IST

ஆர்சிபி அணி டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனின்ஸ் இருவரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

RCB vs KXIP: AB de Villiers Hits One-Handed Six In Insane Knock. Watch
டிவில்லியர்ஸ் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார். © Screengrab: www.iplt20.com

ஆர்சிபி அணி டிவில்லியர்ஸ் மற்றும் ஸ்டோனின்ஸ் இருவரின் அதிரடி ஆட்டத்தால் கிங்ஸ் லெவனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார்.

முகமது ஷமி வீசிய பந்து டிவில்லியர்ஸின் இடுப்புக்கு மேலே பறந்தது. அதனை ஒற்றை கையால் சிக்ஸருக்கு தூக்கி அடித்து அசத்தினார். அது மைதானத்தின் மேற்கூரையை தாண்டி பறந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபியின் ப்ளே ஆஃப் கனவு இன்னும் சாத்தியமாகவே உள்ள சூழல் உருவாகியுள்ளது.

டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 4 வ் இக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேஸ் செய்த கிங்ஸ் லெவன் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

கடைசி 5 ஆட்டங்களில் 4 ஐ வென்றுள்ளோம். நாங்கள் மகிழ்ச்சியான கிரிக்கெட்டை ஆடுகிறோம். டிவில்லியர்ஸ் , ஸ்டோனின்ஸ் வெற்றியை எளிதாக்கினர். அவர்கள் ஆட்டம் தான் அணியிஒன் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றார். 

முதல் 6 போட்டிகளை தொடர்ந்து தோற்ற பெங்களூரு தற்போது 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில் மூன்றையும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • டிவில்லியர்ஸ், ஸ்டோனின்ஸ் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது ஆர்சிபி
  • 82 நிமிடங்கள் மைதானத்தில் இருந்து அசத்தினார் ஏபிடி
  • ஏபிடி 7 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 44 பந்தில் 82 ரன்கள் குவித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பையில் இணைய
உலகக் கோப்பையில் இணைய 'ஏபி டிவில்லியர்ஸ் - டு பிளசிஸ்' இடையே நடந்த போன் உரையாடல்!
"டிவில்லியர்ஸ் தேர்வு மறுப்புக்கு வருத்தமில்லை": தென்னாப்பிரிக்கா தேர்வுக் குழு
"டிவில்லியர்ஸ் தேர்வு மறுப்புக்கு வருத்தமில்லை": தென்னாப்பிரிக்கா தேர்வுக் குழு
''ஆர்சிபி ஃபேன்ஸ் எங்களை மன்னிச்சுடுங்க'' நெகிழ வைத்த கோலி, டிவில்லியர்ஸ்
டெல்லியின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
டெல்லியின் ப்ளே ஆஃப் கனவை தாமதப்படுத்துமா ஆர்சிபி?
ஷமி பந்தை ஒற்றை கையால் சிக்ஸருக்கு விரட்டிய ஏபி டிவில்லியர்ஸ்!
ஷமி பந்தை ஒற்றை கையால் சிக்ஸருக்கு விரட்டிய ஏபி டிவில்லியர்ஸ்!
Advertisement