விராட் கோலிக்கு புதிய செல்லப் பெயர் சூட்டிய டிவில்லியர்ஸ்!

Updated: 20 April 2019 13:33 IST

நேற்றைய போட்டியில் ஆடாத டிவில்லியர்ஸ் கோலியின் பேட்டிங்கை கண்டு வியந்து அவருக்கு ஒரு பட்ட பெயரை சூட்டியுள்ளார் - KKR vs RCB: AB de Villiers Nickname For Virat Kohli After 5th IPL Hundred

KKR vs RCB: AB de Villiers Nickname For Virat Kohli After 5th IPL Hundred
டிவில்லியர்ஸ் கோலியை 'லிட்டில் பிஸ்கட்' என்று அழைத்துள்ளார். © BCCI/IPL

விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தனது 5வது சதத்தை நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக பூர்த்தி செய்தார். இதன் மூலம் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் ஆடாத டிவில்லியர்ஸ் கோலியின் பேட்டிங்கை கண்டு வியந்து அவருக்கு ஒரு பட்ட பெயரை சூட்டியுள்ளார்.

விராட் கோலியை எல்லாரும் சிக்கு, கிங் கோலி என செல்லமாக அழைப்பார்கள்.ஆனால் டிவில்லியர்ஸ் கோலியை 'லிட்டில் பிஸ்கட்' என்று அழைத்துள்ளார்.

ரசிகர்களும் பெருமளவில் அந்த பெயரை ரசித்து ட்விட் செய்து வருகின்றனர்.

விராட் கோலி 58 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபில் தொடரில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்பின் கெயில் 5 சதங்களுடன் முதலிடத்திலும், வார்னர் மற்ற வாட்சன் தலா 4 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். 

விராட் முதல் அரைசதத்தை 40 பந்துகளிலும், இரண்டாவது அரைசதத்தை 17 பந்துகளிலும் கடந்தார்.

ஆர்சிபி கடைசி 5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்களில் 213 ரன்களை குவித்தது.

கோலி சதமடித்தாலும் அணியின் ஸ்கோர் உயர, மொயின் அலி முக்கிய காரணமாக இருந்தார். 28 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். கோலி மற்றும் அலி சேர்ந்து 90 ரன்கள் சேர்த்தனர்.

Comments
ஹைலைட்ஸ்
  • டிவில்லியர்ஸ் கோலிக்கு பட்ட பெயர் வைத்துள்ளார்
  • ஆர்சிபி அணியின் ஸ்கோர் உயர மொயின் அலி முக்கிய காரணமாக இருந்தார்
  • கொல்கத்தா அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி
தொடர்புடைய கட்டுரைகள்
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"டெண்டுல்கரின் ஒரு சாதனையை கோலியாலும் முறியடிக்க முடியாது" - சேவாக்!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"என் வாழ்க்கையில் கிடைத்த வரம் அனுஷ்கா" - காதலை வெளிப்படுத்திய கோலி!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
"நான் சுயநலவாதியல்ல" - சதமடிக்காதது குறித்து ரஹானே!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் கோலியின் சிறப்பு உரையாடல் டீசர்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு பீச்சில் நேரம் கழிக்கும் இந்திய வீரர்கள்!
Advertisement