ரசிகர்களுக்காக பிராவோ உருவாக்கிய புதிய ஆன்தம் பாடல்!

Updated: 07 June 2018 22:39 IST

இருபது ஓவர் ஆட்டங்களில், 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனைய புரிந்துள்ளார் பிராவோ

IPL 2018: MS Dhoni Features In Dwayne Bravo
© BCCI

மேற்கிந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ட்வைன் பிராவோ, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர். மே 27 ஆம் தேதி, 2018ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அணிக்கு புதிய ஆன்தம் உருவாக்கும் பணிகளில் இருந்தார் பிராவோ. “வி ஆர் தி கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்” என்ற புதிய ஆன்தமை
உருவாக்கியுள்ளார். இந்த பாடலில், மகேந்திர சிங் தோனி தோன்றியுள்ளது மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

புதிய பாடலை பிராவோ தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்தார்,

#csk ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, “வி ஆர் தி கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ்” பாடலைப் பகிர்கிறேன். நீங்கள் அனைவரும் இதை விரும்புவீர்கள் என நம்புகிறேன். #yellowaarmy #rundworld #champion #WeAreTheKings” உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுடன் பகிர்ந்து கொண்டார்.

 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை இறுதி போட்டியில் தோற்கடித்து 2018 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோ, சராசரி 35.25 புள்ளிகளுடன் 141 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 14 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தின் போது, இருபது ஓவர் ஆட்டங்களில், 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் மேற்கிந்திய அணி வீரர் என்ற சாதனைய புரிந்துள்ளார் பிராவோ. ஆல்-ரவுண்ர் பிராவோ கே.எப்.சி பிக் பாஷ் லீக் ஆட்டத்தில், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார்.

கடந்த ஏழு வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கெடுக்காத பிராவோ, 2014 ஆம் ஆண்டு முதல், ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுவதில்லை.

Comments
ஹைலைட்ஸ்
  • ட்வைன் பிராவோ, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர்
  • ‘சாம்பியன்ஸ்’ பாடல், பல அணிகளுக்கான ‘வெற்றி கீதமாக’ மாறியுள்ளது
  • சென்னை சூப்பர் கிங்ஸுக்கு புதிய ஆன்தம் உருவாக்கும் பணியில் இருக்கிறார்
தொடர்புடைய கட்டுரைகள்
"உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் தோனிக்கு இல்லை" - நண்பர் அருண் பாண்டே
"உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் தோனிக்கு இல்லை" - நண்பர் அருண் பாண்டே
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம்... இந்திய அணி ஜூலை 21ம் தேதி தேர்வு!
"தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவரிடம் தெரிவிக்க வேண்டும்" - வீரேந்தர் சேவாக்
"தோனியின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ அவரிடம் தெரிவிக்க வேண்டும்" - வீரேந்தர் சேவாக்
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
கோலி அவுட், தோனி டவுட் - மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியில் யார் இடம்பெறுவர்?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை?
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனிக்கு இடமில்லை?
Advertisement