`என் மகள் ஆசைபட்டது எதுக்கு தெரியுமா؟'- தோனி உருக்கம்

Updated: 30 May 2018 18:03 IST

அடுத்தடுத்த வெற்றிகளால் தொடர்ந்து 7 வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது

IPL 2018 Final, CSK vs SRH: MS Dhoni Reveals Daughter Ziva
© BCCI

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கியது சென்னை அணி. சில மாற்றங்கள் செய்யப்பட்டும், சீனியர் வீரர்களே அணியில் இடம் பெற்றிருந்தனர். மஞ்சள் ஜெர்சியுடன் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி ஐபிஎல் சீசன் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது. அடுத்தடுத்த வெற்றிகளால் தொடர்ந்து 7 வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற சென்னை அணி இறுதிப் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது. அதிரடியாக ஆடிய வாட்சன் 107 ரன் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் சென்னை அணி தனது இலக்கான 179 ரன்னை எளிதாக கடந்து வெற்றிபெற்றது.

 

 

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திரசிங் டோனி கூறுகையில், "எங்கள் அணி வீரர்கள் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்தனர். ஐதராபாத் அணி வீரர் ரஷீத்கான் சிறப்பாக அழுத்தத்தை கொடுத்தார். ஆனாலும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் மீது சிறப்பாதன நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்றார்.

டோனி வெற்றிக்கோப்பையை தனது மனைவி சாக்சி, குழந்தை ஸிவா வுடன் இருக்கும் போட்டோவை டுவிட்டரில் போட்டு ஸிவாவுக்கு (அவர் மகள்) வெற்றிக் கொண்டாட்டத்தின் மீது ஆர்வமில்லை. மைதான புல்வெளியில் திரியவே அவளுக்கு பிடித்திருக்கிறது என்று எழுதியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு களமிறங்கியது சென்னை அணி
  • ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றிபெற்றது
  • எங்கள் அணி வீரர்கள் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்தனர்
தொடர்புடைய கட்டுரைகள்
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
ஒருநாள் போட்டியில் ட்ராவிட் சாதனையை கடந்து தோனி சாதனை!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
சர்ச்சையை கிளப்பிய தோனி கிளவுஸ்; முத்திரையை அகற்ற வேண்டும் என ஐசிசி திட்டவட்டம்!
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
“ஐசிசி-யிடம் பர்மிஷன் வாங்கியாச்சு… தோனி முத்திரியை நீக்கமாட்டார்!”- பிசிசிஐ பதிலடி
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோனி கணினியை விட வேகமானவர்" - சோயிப் அக்தர்!
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
"தோல்வி ஏமாற்றத்தையும், கோவத்தையும் தருகிறது" - தென்னாப்பிரிக்க வீரர் மோரிஸ்
Advertisement