சதம் அடித்த வாட்சன்… மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிய சி.எஸ்.கே!

Updated: 30 May 2018 18:05 IST

எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் களத்தில் கலக்கிய தோனி தலைமையிலான சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது

IPL 2018 Final: Chennai Super Kings Claim 3rd IPL Title As Shane Watson Blitzes SunRisers Hyderabad
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது சிஎஸ்கே © BCCI

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையில் நடந்த ஐபிஎல் 2018 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளுக்கு 178 ரன்கள் எடுத்தது. ஐதரபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், வழக்கம் போல தன் அணிக்காக பேட்டிங்கில் கலக்கினார். அவர் 36 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இதையடுத்து வந்தவர்கள் அதிக ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும், யூசப் பதான் அதிரடி காட்டினார். அவர், 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். இதனால், 178 ரன்கள் என்ற மதிக்கத்தக்க ஸ்கோர் எடுத்தது ஐதராபாத்.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை. தொடக்கத்தில் சென்னை அணி, ரன் அடிக்கத் திணறியது. தொடக்க வீரர்களில் ஒருவரான டூப்ளிசஸ், 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறு முனையில் ஷேன் வாட்சன் தொடர்ந்து 10 பந்துகள் ரன் ஏதும் எடுக்காமல் கஷ்டப்பட்டார். பவர்ப்ளே முடிந்தது. ரெய்னாவும் வாட்சனும் ஜோடி சேர்ந்து ஐதராபாத் அணி பௌலர்களின் பந்துகளை மைதானத்தின் நாளா பக்கமும் சிதறடித்தனர். சுரேஷ் ரெய்னா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், வாட்சன் நிலைத்து ஆடினர். சதத்தைக் கடந்தும் களத்தில் நிலைத்து நின்று பந்துகளை பவுண்டரி நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்கவே இல்லை. ரெய்னாவுக்குப் பிறகு களமிறங்கிய ராயுடு, பவுண்டரி அடித்துப் போட்டியை முடித்து வைத்தார். வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 10 பந்துகளுக்கு முன்னரே கடந்தது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின்னர் சென்னை அணி, களம் கண்டிருந்த நிலையில், அவர்கள் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் களத்தில் கலக்கிய தோனி தலைமையிலான சென்னை அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இறுதிப் போட்டியில் சதம் அடித்த வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சென்னை தான் ஐபிஎல்-ன் சூப்பர் கிங்ஸ் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. 

Comments
ஹைலைட்ஸ்
  • இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே
  • இறுதிப் போட்டியில் சதம் அடித்து கலக்கினார் சென்னை அணியின் வாட்சன்
  • இது சிஎஸ்கே வெல்லும் மூன்றாவது ஐபிஎல் கோப்பை
தொடர்புடைய கட்டுரைகள்
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Advertisement