சென்னை அணியின் புது சாதனை

Updated: 05 June 2018 11:04 IST

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த 27ம் தேதி முடிந்தது

IPL 2018: A CSK Record That Went Unnoticed In The Title Celebrations
CSK broke RCB's record of most sixes by a team in a single IPL season. © AFP

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த 11வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த 27ம் தேதி முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வது முறையாக வெற்றிப்பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் சென்னை அணி செய்த சில சாதனைகள்,

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியின் பவுலிங் தந்திரம் சென்னை அணியிடம் எடுபடவில்லை. இப்போட்டியில் வாட்சன் அடித்த 8 சிக்சர்களோடு இந்த சீசனில் சென்னை அணி மொத்தமாக 145 சிக்சர்கள் விளாசியுள்ளது. இதற்கு முன்னர் `ஐபிஎல்'லில் அதிக சிக்சர் எடுத்தது பெங்களூர் ராயல் சேல்ஞ்சர்ஸ் அணி. அந்த பெருமையை சென்னை இம்முறை பெற்றுள்ளது. 

2016 ஐபில் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் வீரர்கள் 142 சிக்சர் அடித்துள்ளனர். இதில் அந்த அணி கேப்டன் கோலி மட்டும் 38 சிக்சர் அடித்து அவரும் ஐபிஎல் அதிக சிக்சர் பேட்ஸ்மேன்களில் முன்னிலை வகித்தார். 

இம்முறை அணிகளுக்குள் வீரர்கள் மாற்றம் இருந்தது. பெங்களூர் அணியை சேர்ந்த 3 பேர் சென்னை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

சென்னை அணி வீரர் வாட்சன் 35 சிக்சர், அம்பதி ராயுடு 34, தோனி 30, சுரேஷ் ரெய்னா 12 மற்றும் பிராவோ 10 சிக்சர் என தங்கள் அணியின் சாதனைக்கு துணைபுரிந்தனர். 

அடுத்ததாக 130 சிக்சர்களுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 3வது இடத்தில் உள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • 11வது ஐபிஎல் கிரிக்கெட் கடந்த 27ம் தேதி முடிந்தது
  • இம்முறை அணிகளுக்குள் வீரர்கள் மாற்றம் இருந்தது
  • அதிக சிக்சர்கள் அடித்த பெருமையை சென்னை பெற்றது
தொடர்புடைய கட்டுரைகள்
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
மனைவி, குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடும் ரோஹித் ஷர்மா!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" - வாட்சனின் இன்ஸ்டாகிராம் பதிவு!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
"தோனி ரன் அவுட் ட்விட்டை நீக்க இதுதான் காரணம்" - நியூசிலாந்து ஜிம்மி நீஷம் விளக்கம்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
ஆறு தையல்... ரத்தம் சொட்ட ஆடிய வாட்சனுக்காக உருகிய ஹர்பஜன்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
வாட்சனை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
Advertisement