சி.எஸ்.கே. மேட்ச் டிக்கெட் டிசைனில் திருமண அழைப்பிதழ் – அன்பை வெளிப்படுத்திய ரசிகர்
பிற மொழிக்கு | READ IN

Updated: 13 September 2018 14:29 IST

மே மாதம் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸை வீழ்த்தி சி.எஸ்.கே. 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Chennai Super Kings Fan Shows His Love For Club With A Unique Marriage Invite
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் ஒருவர் தனது திருமணத்திற்கு சி.எஸ்.கே. மேட்ச் டிக்கெட்டைப் போன்று அழைப்பிதழ் வடிவமைத்துள்ளார். © Twitter

மிகவும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளில் சென்னை சூப்பர் கிங்கும் ஒன்று. தனது அன்பை வெளிப்படுத்துவதற்காக சி.எஸ்.கே. ரசிகர்கள் புதுமையாக ஏதாவது ஒன்றை செய்துக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் கே. வினோத் என்கிற ரசிகர் வித்தியாசமான முறையில் ஒன்றைச் செய்துள்ளார். அவர் தனது திருமண அழைப்பிதழை சி.எஸ்.கே. மேட்சுக்கு வழங்கப்படும் டிக்கெட் டிசைனில் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ நான் சி.எஸ்.கே. மற்றும் கேப்டன் தோனியின் தீவிர ரசிகன். எனது திருமணத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விரும்பினேன். அதனால்தான் இந்த திருமண அழைப்பிதழை வடிவமைத்து அன்பை வெளிப்படுத்தினேன் என்று கூறியுள்ளார்.

அவரது திருமண அழைப்பிதழை சி.எஸ்.கே.-வின் ட்விட்டர் பக்கம் ஷேர் செய்துள்ளது. மேலும், “ சி.எஸ்.கே.வின் சூப்பர் ஃபேன் வினோத்துக்கு திருமண வாழ்த்துக்கள். இந்த திருமண அழைப்பிதழ் மிகவும் ஸ்பெஷலாக உள்ளது என்று ட்விட்டரில் சி.எஸ்.கே. பதிவிட்டுள்ளது.

கடந்த 2015-ல் தோனியிடம் வினோத் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். மே மாதம் நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸை வீழ்த்தி சி.எஸ்.கே. 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வாங்கிய மும்பை அணியின் சாதனையை சி.எஸ்.கே. சமன் செய்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சி.எஸ்.கே. மேட்ச் டிக்கெட் டிசைனில் திருமண அழைப்பிதழ் – அன்பை வெளிப்படுத்திய ரசிகர்
சி.எஸ்.கே. மேட்ச் டிக்கெட் டிசைனில் திருமண அழைப்பிதழ் – அன்பை வெளிப்படுத்திய ரசிகர்
மில்க்க்ஷேக் முதல் கெபாப் வரை: தோனியின் பிட்னெஸ் சிகிரெட்
மில்க்க்ஷேக் முதல் கெபாப் வரை: தோனியின் பிட்னெஸ் சிகிரெட்
கிரிஸ் கெயிலை பார்த்து
கிரிஸ் கெயிலை பார்த்து 'ஜமைக்காவின் டேலர் மெஹந்தி' என அழைத்த தவான்
ரசிகர்களுக்காக பிராவோ உருவாக்கிய புதிய ஆன்தம் பாடல்!
ரசிகர்களுக்காக பிராவோ உருவாக்கிய புதிய ஆன்தம் பாடல்!
சென்னை அணியின் புது சாதனை
சென்னை அணியின் புது சாதனை
Advertisement