கோலியை கோபப்படுத்திய அந்த ரன்-அவுட் - வைரலான ஜடேஜா!

Updated: 05 October 2018 20:36 IST

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

India vs West Indies:
Img- ஜடேஜாவின் செயல், கேப்டன் கோலியை மிகவும் கோபப்படுத்தியது © Twitter

 

இந்தியா- மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்துள்ளது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 649 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இரண்டாம் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ், தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்கம் முதலே அந்த அணியின் பேட்ஸ்மேன்கள், இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால், விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன.
 

 

அந்த அணியின் சுனில் ஆம்ப்ரீஸ் மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் 12வது ஓவரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பந்தை மிட்-ஆன் பகுதிக்கு ஆம்ப்ரீஸ் தட்டினார். அப்போது, ஹெட்மயர் விறுவிறுவென ரன் ஓட, ஆம்ப்ரீஸ் ஓடமலேயே நின்றார். பந்து ரவீந்திரா ஜடேஜாவிடம் சென்றது. ரன்-அவுட் வாய்ப்பு இருந்ததை கணித்த ஜடேஜா, பந்தை, பௌலரிடம் தூக்கியெறியப் பார்த்தார். ஆனால் ஹெட்மயர், விக்கெட்டின் இன்னொரு முனையில் இருக்கவே, மெதுவாக நடந்து சென்ற ரன்-அவுட் செய்தார். ஜடேஜாவின் அசால்டு நடவடிக்கையால், ஹெட்மயர், கிட்டத்தக்க க்ரீஸுக்குள்ளேயே வந்துவிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோலி, சினம் கொண்டு ஜடேஜாவை வறுத்தேடுத்தார். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாமல் ஜடேஜா, தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருந்தார். ஜடேஜாவின் இந்த செயல், சமூக வலைதளங்களில் படு வைரலானது.

Comments
ஹைலைட்ஸ்
  • ஜடேஜாவின் செயல் கோலியை மிகவும் கோபப்படுத்தியது
  • இந்தியா முதல் இன்னிங்ஸில், 9-649 ரன்கள் எடுத்துள்ளது
  • வெ.இண்டீஸ், 6 விக்கெட்டுகள் இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆட்டம்! இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்!!
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
"அமீரை பாசிட்டிவாக அணுகுங்கள்" - இந்தியாவை எச்சரிக்கும் சச்சின்
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
தவான் காயம் குறித்து விளக்கமளித்த கேப்டன் விராட் கோலி
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
உலகக் கோப்பை 2019: ஷிகர் தவான் இல்லாத அணி நியூசிலாந்தை சமாளிக்குமா? #Preview
உலகக் கோப்பை 2019: ஷிகர் தவான் இல்லாத அணி நியூசிலாந்தை சமாளிக்குமா? #Preview
Advertisement