அணியில் இடமில்லை: வருத்தத்தில் கேதார் ஜாதவ்!

Updated: 26 October 2018 13:03 IST

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது

India vs West Indies: Kedar Jadhav Bemused By Selectors
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் நன்றாக விளையாடிய ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவுக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடமளிக்கப்படவில்லை © AFP

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளன. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது. 

இந்நிலைநில் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது, பிசிசிஐ நிர்வாகம். அணி பட்டியலில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் புவ்னேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் நன்றாக விளையாடிய ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவுக்கு இடமளிக்கப்படவில்லை. இது குறித்து அவர் அதிச்சி தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஜாதவிடம் கேட்டபோது, ‘நான் தேர்வு செய்யப்படாதது குறித்து எதவும் தெரியாது. நீங்கள் தான் முதலில் இதை என்னிடம் கேட்கின்றனர். என்னை ஏன் தேர்வு குழு, தொடரில் விளையாட தேர்வில் செய்யவில்லை என்பது குறித்து நான் கேட்டறிய வேண்டும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நான் தேர்வு செய்யப்படாததால், தற்போது என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ரஞ்சி டிராபி விளையாட வாய்ப்புள்ளது' என்று கூறினார். 

இந்த விவகாரம் குறித்து தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், ‘நாங்கள் கேதார் ஜாதவை தேர்வு செய்யாததற்குக் காரணம், அவரது உடல்தகுதியை மனதில் கொண்டுதான். அவர் முழு உடற்தகுதியுடன் அணிக்கு வந்த பிறகும், மீண்டும் காயம் ஏற்பட்டு விடுகிறது. அதனால் தான் இந்த முறை அவரை நாங்கள் தேர்வு செய்யவில்லை' என்று விளக்கம் அளித்தார். 

Comments
ஹைலைட்ஸ்
  • தேர்வு செய்யப்படாதது குறித்து ஜாதவ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்
  • வெ.இண்டீஸுக்கு எதிரான கடைசி 3 போட்டிகளுக்கான அணி அறிவிப்பு
  • இதில் ஜாதவுக்கு இடமளிக்கப்படவில்லை
தொடர்புடைய கட்டுரைகள்
தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ஃப் விளையாடிய தோனி!
தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ஃப் விளையாடிய தோனி!
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
பாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..?
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்!!
Advertisement