தவான் அதிரடி ஆட்டம்: டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!

Updated: 12 November 2018 00:18 IST

இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

India vs West Indies: Shikhar Dhawan
இதன் மூலம் இருபது ஓவர் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. © Twitter

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி இன்று சென்னையில் இருக்கும் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இருபது ஓவர் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இருபது ஓவர் தொடரில் அதை மாற்றிக் காட்டலாம் என்று முனைப்போடு களம் கண்டது. ஆனால், முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் மண்ணைக் கவ்வியது வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில் இன்று களமிறங்கியது மேற்கிந்தியத் தீவுகள்.

போட்டிக்கான டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ், பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கவே, அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹோப் மற்றும் ஹெட்மயர், ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் முறையே, 24 மற்றும் 26 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டேரன் பிராவோ மற்றும் நிகோலஸ் பூரான் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். பிராவோ 43 ரன்கள் எடுக்க பூரான் அரை சதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இந்திய அணி சார்பில், தவான் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா ஓபனிங் இறங்கினார்கள். ஷர்மா, 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த லோகேஷ் ராகுலும், 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். ஆனால் ரிஷப் பேன்டும் தவானும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தவான் 92 ரன்களுக்கு அவுட்டாக, பேன்ட் 58 ரன்களுக்கு விக்கெட்டை விட்டுக் கொடுத்தார். சரியாக 20 ஓவர் முடிகையில் இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 4 விக்கட்டுகளை இழந்த நிலையில் கடந்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

 

 

Comments
ஹைலைட்ஸ்
  • தவான், 92 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்
  • வெ.இண்டீஸின் பூரான், அரை சதமடித்து கலக்கினார்
  • பேன்ட்-தவான் பார்டனர்ஷிப் இந்திய வெற்றிக்குக் காரணம்
தொடர்புடைய கட்டுரைகள்
தவான் அதிரடி ஆட்டம்: டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
தவான் அதிரடி ஆட்டம்: டி20 தொடரை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
சென்னை டி20 போட்டி பும்ராஹ், உமேஷ், குல்தீப்புக்கு ஓய்வு!
சென்னை டி20 போட்டி பும்ராஹ், உமேஷ், குல்தீப்புக்கு ஓய்வு!
Advertisement