Listen to the latest songs, only on JioSaavn.com
 

விராட் கோலியின் சாதனையை முறியடிக்கப் போகும் ரோகித்..!

Updated: 06 November 2018 17:27 IST

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு உச்சபட்ச பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்

Rohit Sharma On The Brink Of Big Milestone, Will Overtake Virat Kohli
கோலி உள்நாட்டில் நடக்கும் இருபது ஓவர் தொடர்களை தொடர்ந்து தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது © AFP

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த ஆண்டு உச்சபட்ச பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். பல பழைய சாதனைகளை தவிடுபொடியாக்கியுள்ளார். ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் ஷர்மா, கோலியின் ஒரு சாதனையை இன்று முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா சார்பில் அதிக ரன்கள் அடித்தது கோலி தான். அவர் 62 போட்டிகளில் 2,102 ரன்களை, 48.88 சராசரியில் குவித்துள்ளார். அதே நேரத்தில் ரோகித் 85 போட்டிகள் விளையாடி 32.18 சராசரியில் 2,092 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிராக, இந்திய அணி விளையாடி வரும் இருபது ஓவர் தொடரிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் கோலி. அவர் இல்லாததால் ரோகித் தான், அணியை வழி நடத்தி வருகிறார். 3 போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி, இன்று லக்னோவில் நடக்கிறது. அதில் 11 ரன்கள் மட்டும் அடித்தால், இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை ரோகித் பெறுவார். அது நடக்க அதிக வாய்ப்புள்ளதால், விராட் கோலியின் சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலி உள்நாட்டில் நடக்கும் இருபது ஓவர் தொடர்களை தொடர்ந்து தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் முழு உடல் திறனுடன் விளையாட வேண்டும் என்ற நோக்கில் இப்படி அவர் ஓய்வு எடுத்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

Comments
ஹைலைட்ஸ்
  • சாதனைப் படைக்கும் விளிம்பில் இருக்கிறார் ரோகித்
  • கோலி இல்லாததால் அணியை ரோகித் தான் வழிநடத்தி வருகிறார்
  • இன்று வெ.இண்டீஸுக்கு எதிராக இந்தியா 2வது டி20-யில் விளையாடுகிறது
தொடர்புடைய கட்டுரைகள்
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
தன்னுடைய வொர்க் அவுட் வீடியோவில் சாஹலை ட்ரோல் செய்த ரோஹித் ஷர்மா!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
பேட்டிங் பிரச்னையை தீர்க்க ரசிகர் கூறிய ஆலோசனை... இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
தர்பூசணியில் தன்னை வரைந்த ரசிகரின் முயற்சியைப் பாராட்டிய யுவராஜ் சிங்!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
கொரோனாவால் பாதிக்கப்படும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பயிற்சி!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
“Keep It Up” சேலஞ்ச் - டாப் கிரிக்கெட் வீரர்களைப் பரிந்துரை செய்த யுவராஜ் சிங்!
Advertisement