IND vs WI: முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக். இழப்புக்கு 295 ரன்கள்

Updated: 12 October 2018 20:58 IST

இந்தியாவுக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.

India vs Windies 2nd Test: Roston Chase Spearheads Windies Fightback on Day 1
வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ராஸ்டன் சிறப்பாக விளையாடி 98 ரன்களுடன் களத்தில் உள்ளார். © AFP

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் தெலங்கானா மாநிம் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார்.

உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இதன்பின்னர் ஆட்டம் ஆரம்பித்தபோது, வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஹெட்மையர் 12 ரன்கள் எடுத்த நிலையிலும், அம்ப்ரிஸ் 18 ரன்கள் எடுத்த நிலையிலும் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவரில் 113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின்னர் ராஸ்டன் சேஸ் உடன் விக்கெட் கீப்பர் டவ்ரிச் இணைந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 6-வது விக்கெட்டுக்கு இந்த இணை 69 ரன்கள் சேர்த்தது. ராஸ்டன் 80 பந்துகளில் அரைச்சதம் கண்டார். 85 பந்தில் அரைச்சதம் அடித்த ஹோல்டர் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

95 ஓவர்கள் முடிந்தபோது முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. 7 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 295 ரன்கள் எடுத்திருந்தது. ராஸ்டன் 98 ரன்களுடனும், பிஷு 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
தோனியை விமர்சித்த சச்சின்… சச்சினை வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்!
'இந்தியாவை வீழ்த்தும் திறன் எங்களுக்கு உண்டு!'- சீண்டும் ஷகிப்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
“இந்தியாவிடம் தோல்வி… தற்கொலை எண்ணம் வந்தது!”- பாக். கோச் பகீர் தகவல்
உலகக் கோப்பை 2019: எந்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்..?
உலகக் கோப்பை 2019: எந்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்..?
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
அம்பயரிடம் முறையிட்டதால் கோலிக்கு அபராதம்
Advertisement