வெஸ்ட் இண்டீஸை கலாய்த்த ஹர்பஜன் சிங்… வறுத்தெடுத்த முன்னாள் வீரர்!

Updated: 09 October 2018 13:38 IST

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வி அடைந்துள்ளது

India vs West Indies: Tino Best Gives Harsh Rebuttal To Harbhajan Singh For Tweet On Windies Team
நெட்டிசன்கள், ஹர்பஜனின் செயலை கடுமையாக விமர்சித்தனர் © AFP

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் போட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை கலாய்த்துள்ளார் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இதற்கு அந்த அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜனை விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரை விளையாடி வருகிறது. 

முதல் டெஸ்ட் போட்டி, ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்தது. 

முதல் போட்டி குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரேயொரு கேள்வி இருக்கிறது. ரஞ்சி கோப்பையில் விளையாடினால், உங்கள் அணி காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுமா?’ என்று கலாய்க்கும் வகையில் பதிவிட்டிருந்தார். 

இதையடுத்து நெட்டிசன்கள், ஹர்பஜனின் செயலை கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டீனோ பெஸ்ட், ‘இங்கிலாந்து சென்று இந்திய அணி விளையாடிய போது, இதைப் போன்ற ட்வீட்டுகள் உங்களிடமிருந்து வரவில்லையே… எப்படி இருந்தாலும் இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி, அவர்களின் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்வார்கள்’ என்று பதிலடி கொடுத்தார்.


 

Comments
ஹைலைட்ஸ்
  • வெஸ்ட் இண்டீஸை கலாய்க்கும் வகையில் ஹர்பஜன் ட்வீட்டினர்
  • ஹர்பஜனுக்கு, டீனோ பெஸ்ட் பதிலடி கொடுத்துள்ளார்
  • முதல் போட்டியில் வெ.இண்டீஸ் அணி, இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது
தொடர்புடைய கட்டுரைகள்
“சதம் அடிச்சதும் நாக்கை ஏன் வெளியே நீட்றீங்க?” - ரோஸ் டெய்லரை வம்பிழுத்த ஹர்பஜன்!
“சதம் அடிச்சதும் நாக்கை ஏன் வெளியே நீட்றீங்க?” - ரோஸ் டெய்லரை வம்பிழுத்த ஹர்பஜன்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
ஒருநாள் போட்டிகளில் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
Rahul Dravid Birthday: டிராவிட்டின் சிறந்த ஒருநாள் போட்டியை நினைவுகூர்ந்தது பிசிசிஐ!
IndvsSL: பயிற்சியின் போது ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சை பிரதிபலித்த கோலி!
IndvsSL: பயிற்சியின் போது ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சை பிரதிபலித்த கோலி!
முதல் டி20 போட்டியின் போது கூட்டத்தை உற்சாகப்படுத்திய ஹர்பஜன் சிங், இர்பான் பதான்
முதல் டி20 போட்டியின் போது கூட்டத்தை உற்சாகப்படுத்திய ஹர்பஜன் சிங், இர்பான் பதான்
Advertisement