3rd Test, Day 2: Rohit Sharma இரட்டை சதம்… பவுலர்கள் ஆட்டம் ஆரம்பம்!

Updated: 21 October 2019 10:01 IST

3rd Test, Day 2: 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது

Rohit Sharma Double Hundred, Early Mohammed Shami, Umesh Yadav Strikes Put India On Top
3rd Test, Day 2: ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. © AFP

3rd Test, Day 2: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது நாளான இன்று அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா (Rohit Sharma), இரட்டை சதம் அடித்தார். அதைத் தொடர்ந்து 497 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது இந்தியா. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென் ஆப்ரிக்காவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான டீன் எல்கர் மற்றும் குவின்டன் டிகாக் ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள்.

இதனால், 2வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்கா, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 

ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மயான்க் அகர்வால் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த புஜாரா மற்றும் கோலி ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார்கள். ஆனால், தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் மற்றும் ரஹானே ஆகியோர் நிலையாக நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். 

ரஹானே சதமடிக்க, ரோகித் இரட்டை சதமடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஜடேஜாவும் அரைசதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா, 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே, 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 

தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்கா, 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, 2வது நாள் ஆட்ட முடிவில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தி திணறிக் கொண்டிருக்கிறது.  இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். 

Comments
ஹைலைட்ஸ்
  • Rohit Sharma, இந்தியா சார்பில் இரட்டை சதமடித்தார்
  • Umesh Yadav, Mohammed Shami தலா ஒரு விக்கெட் இழந்தனர்
  • South Africa 9/2 என்ற நிலையில் இருக்கிறது
தொடர்புடைய கட்டுரைகள்
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
"இந்தத் தோல்வி மன காயத்தை ஏற்படுத்தியுள்ளது" - ஃபாப் டு பிளெசிஸ்!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்றாவது டெஸ்ட்டை வென்று 3-0 என்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா!
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்...
விராட் கோலியின் வினோத ரியாக்‌ஷன்... 'கல்லி பாய்'உடன் ஒப்பிட்ட ரசிகர்கள்!
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
இந்தியா vs தென்னாப்பிரிக்கா: 3வது டெஸ்ட் மூன்றாவது நாள் #Scorecard
Advertisement