இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!

Updated: 17 January 2020 14:56 IST

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

India vs Australia 2nd ODI Live Score, IND vs AUS Live Match Updates: Adam Zampa Strikes For Australia As Rohit Sharma Departs For 42
3 போட்டிகள் கொண்ட தொடரில் இறுதிப்போட்டி ஞாயிறன்று நடைபெறுகிறது. © AFP

Ind vs Aus Live Match Score: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் போட்டியின் ஸ்கோர் கார்டை இந்த பகுதியில் காணலாம்.

டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச், இந்தியாவை முதலில் பேட் செய்யும்படி பணித்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

2-வது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வென்றிருந்தது. அந்த போட்டியில் இடம்பெற்றிருந்த அதே 11 வீரர்கள் 2-வது போட்டியிலும் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற பிஞ்ச், ‘நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். இந்த பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. பவுலர்கள் சிறப்பாக பந்து வீசுகின்றனர். எங்கள் அணியில் மாற்றம் இல்லை' என்று கூறினார்.

இந்திய அணியில் 2 மாற்றங்கள் பவுலிங் மற்றும் பேட்டிங் தரப்பில் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக காயம் அடைந்திருக்கும் ரிஷப் பண்டுக்கு பதிலாக மணிஷ் பாண்டே களம் இறக்கப்பட்டுள்ளார். பவுலிங்கில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் முதலில் பந்து வீசலாம் என்றிருந்தோம். இன்றைக்கு பனி அதிகம் காணப்படவில்லை என்பது நல்ல விஷயம். பிட்ச் அருமையாக உள்ளது. நல்ல ரன்களை நாங்கள் குவித்து விட்டால், எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடி கொடுக்கலாம். சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணியை தொடர்ந்து வீழ்த்த முடியும். கடந்த போட்டியில் என்ன தவறு செய்தோம் என்பதை உணர்வதுதான் முக்கியம். நாங்கள் எங்கள் பலத்தின் மீது கவனம் செலுத்துகிறோம். கடந்த போட்டியை விட வலுவாக இருக்கிறோம். அணியில் 2 மாற்றங்கள். ரிஷப் பண்டுக்கு பதிலாக மணிஷ் பான்டே வந்துள்ளார். கே.எல். ராகுல் கீப்பிங் செய்வார். ஷர்துலுக்கு பதிலாக சைனி களத்தில் இறங்குவார்' என்று தெரிவித்தார்.

 (LIVE SCORECARD)

Live Score Updates Between India vs Australia 2nd ODI, straight from Saurashtra Cricket Association Stadium, Rajkot

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
கே.எல்.ராகுலை "பல பரிமாணம் கொண்ட வீரர்" என்றார் விராட் கோலி!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
இந்தியா vs ஆஸ்திரேலியா : 2-வது ஒருநாள் போட்டி ஸ்கோர் கார்டு!!
Advertisement