உலகக்கோப்பை ஹாக்கி : ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகும் டைட்டில் சாங்

Updated: 21 September 2018 16:50 IST

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 15-ம்தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகளை நடைபெறுகின்றன.

AR Rahman, Gulzar To Create Title Song For Men
பிரபல பாடலாசிரியர் குல்சாரின் பாடலுக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான் © AFP

ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி 2018-க்கான போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கான டைட்டில் சாங்கை பிரபல பாடலாசிரியர் குல்சார் எழுதியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். “ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா” என்று பாடல் வரிகள் தொடங்குகின்றது. இதுகுறித்து ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடப்பது மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாக்கி போட்டிகளை இந்தியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். உலகக் கோப்பை போட்டிக்கான குல்சாரின் பாடல் வரிகளும் எனது இசையும் இன்னும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். உணர்வுப்பூர்வமாக இந்த பாடல் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஹாக்கி கொண்டாட்டத்தில் என்னுடன் இணைந்திருங்கள் என்று கூறியுள்ளார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவனேஸ்வரத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுவது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மொத்தம் 16 நாடுகள் இந்த உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன. 3-வது முறையாக இந்தியா உலகக்கோப்பை ஹாக்கியை நடத்துகிறது. முன்னதாக 1982-ல் மும்பையிலும், 2010-ல் டெல்லியிலும் நடைபெற்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி
Advertisement