பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி

Updated: 01 August 2018 15:06 IST

பெண்கள் ஹாக்கி உலக தர வரிசை பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, காலிறுதி முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது

Women
© Hockey India

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் நடைப்பெற்று வருகிறது. நேற்று நடைப்பெற்ற காலிறுதி தகுதி சுற்றுப் போட்டியில், இந்தியா- இத்தாலி அணிகள் மோதின. அதிரடியாக விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் போட்டியை கைப்பற்றியது

பெண்கள் ஹாக்கி உலக தர வரிசை பட்டியலில் 10 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, காலிறுதி முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

போட்டி தொடங்கிய 9 வது நிமிடத்தில் இந்தியாவின் லால்ரெம்சியாமி முதல் கோல் அடித்தார். போட்டியின் தொடக்கம் முதலே, இத்தாலி அணியினர் திணறிவந்தனர். போட்டியின் அரை இறுதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது

ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்ய இத்தாலி அணியினர் போராடினர். எனினும், இந்திய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தால், போட்டியின் முடிவு வரை இத்தாலி அணி கோல் அடிக்கவில்லை

போட்டியின் இரண்டாம் பாதியில், 45 வது நிமிடத்தில் இந்தியாவின் நேஹா இரண்டாவது கோல் அடித்தார். அதனை தொடர்ந்து, 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் வந்தனா மூன்றாவது கோல் அடித்தார். இதன் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, வியாழக்கிழமை நடக்க இருக்கும் காலிறுதி போட்டியில் ஐயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
Advertisement