உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா

Updated: 21 July 2018 22:03 IST

லண்டனில் துவங்கியுள்ள உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில், இங்கிலாந்து - இந்தியா மோதிய முதல் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது

Women

14வது பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் லண்டனில் இன்று துவங்கியுள்ளன. இதில், இங்கிலாந்து - இந்தியா மோதிய முதல் ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.

லண்டனில் துவங்கியுள்ள உலகக்கோப்பை பெண்கள் ஹாக்கிப் போட்டியில், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த போட்டித்தொடரில், பி பிரிவில் இடம் பெற்றுள்ள‌ இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதின.  இதில், இந்திய அணியின் 23வது நிமிடத்தில் இந்தியாவின் நேகா கோயல் முதல் கோலை அடித்தார்.

இதனையடுத்து, இந்தியா முன்னிலை வகித்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் லில்லி ஓவ்ஸ்லி கோல் அடிக்க போட்டி 1-1 என சமன் செய்யப்பட்டது.

உலகத் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இந்திய அணி, 7வது முறையாக உலக கோப்பை போட்டிகளில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி, இந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 4வது இடம் பிடித்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள் நிறைவுவிழா: ராணி ராம்பால் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்!
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
ஆசிய போட்டிகள்: ஹாக்கி போட்டியில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்த இந்திய வீராங்கனை
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
பெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடர்: காலிறுதியில் இந்திய அணி
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி: இங்கிலாந்தை 1-1 என சமன் செய்த இந்தியா
Advertisement