ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்

Updated: 01 April 2019 17:37 IST

தென்கொரியா கேப்டன் லீனாம் யங் ஆட்டத்தின் நடுவே ஒரு மேஜிக் தருணத்தை நிகழ்த்தினார். இந்திய கோல் கீப்பர் தலைக்கு மேலே ஒரு ஷாட் அடித்து அதனை கோலாக்கினார்.

Sultan Azlan Shah: South Korea Captain
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் தென்கொரியா இந்தியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. © Twitter

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் தென்கொரியா இந்தியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஐந்துமுறை சாம்பியனான இந்தியாவை தென் கொரியா வீழ்த்தியுள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள ஹாக்கி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. தென்கொரியா கேப்டன் லீனாம் யங் ஆட்டத்தின் நடுவே ஒரு மேஜிக் தருணத்தை நிகழ்த்தினார். இந்திய கோல் கீப்பர் தலைக்கு மேலே ஒரு ஷாட் அடித்து அதனை கோலாக்கினார். அது தென் கொரிய அணிக்கு கோப்பையை கைப்பற்றி தந்தது.

இறுதிப்போட்டியில் 5ம் நிலை அணியான இந்தியா, 17ம் நிலை அணியான தென்கொரியாவை எதிர்கொண்டது. 9வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞித் கோலடிக்க பதில் கோலை 47வது நிமிடத்தில் ஜாங் ஜோங் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்தார்.

கடைசி இரண்டு நிமிடத்துக்கு முன்னால் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டியை தவறவிட, ஆட்டம் ஷூட் அவுட்டுக்கு சென்றது. ஷூட் அவுட்டில் 4-2 என்று கோலடித்து தென்கொரியா மூன்றாவது முறையாக பட்டம் வென்றது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி
Advertisement