Listen to the latest songs, only on JioSaavn.com
 

Nehru Cup Finals: ஹாக்கி போட்டியின் போது அணிகளுக்கு இடையில் மோதல்

Updated: 26 November 2019 11:36 IST

திங்களன்று நடந்த நேரு கோப்பை இறுதிப் போட்டியின் போது பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹாக்கி அணிகள் சண்டையில் ஈடுபட்டன.

Nehru Cup Finals: Brawl Breaks Out Between Teams During Hockey Match. Watch
இரு அணிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐஓஏ தலைவர் ஹாக்கி இந்தியாவை வலியுறுத்தினார். © Twitter

திங்களன்று நடந்த நேரு கோப்பை இறுதிப் போட்டியின் போது பஞ்சாப் போலீஸ் மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஹாக்கி அணிகள் சண்டையில் ஈடுபட்டன. இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் (ஐஓஏ) தலைவர் நரிந்தர் பாத்ரா, ஹாக்கி இந்தியா விளையாட்டுக்கு 'கெட்ட பெயரை' கொண்டுவந்ததற்காக இரு அணிகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "இத்தகைய பொறுப்பற்ற அணிகள் மற்றும் அவர்களின் கவனக்குறைவான / அக்கறையற்ற நிர்வாகம், அத்தகைய வீரர்கள் மற்றும் பலவீனமான மற்றும் முதுகெலும்பு இல்லாத அமைப்புக் குழுக்கள் விளையாட்டின் பெயரைக் கெடுத்து விளையாட்டிற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகின்றன, அதிகபட்ச கடுமையான நடவடிக்கை எடுக்க ஹாக்கி இந்தியாவை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பத்ரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் என்று ஹாக்கி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி எலெனா நார்மன் தெரிவித்தார்.

"போட்டி அதிகாரிகள் தயாரிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அதன் அடிப்படையில் ஹாக்கி இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும்" என்று நார்மன் ANIயிடம் கூறினார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
Nehru Cup Finals: ஹாக்கி போட்டியின் போது அணிகளுக்கு இடையில் மோதல்
Nehru Cup Finals: ஹாக்கி போட்டியின் போது அணிகளுக்கு இடையில் மோதல்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
Advertisement