உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?

Updated: 13 December 2018 16:27 IST

நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது.

Men
975ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆடியதே இந்தியாவின் சிறப்பான முன்னேற்றமாகும். © Hockey India

43 வருட கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் கனவை நிறைவேற்றும் முனைப்புடன் இந்தியா ஆடி வருகிறது. புவனேஷ்வரில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. 1975ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆடியதே இந்தியாவின் சிறப்பான முன்னேற்றமாகும். நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது. ஒன்று ட்ரா ஆகியுள்ளது.

தற்போது தரவரிசையில் நெதர்லாந்து 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் சாம்பியன் கோப்பை போட்டியில் மோதின. அந்தப் போட்டி 1-1 என்ற கணக்கில் ட்ரா ஆனது.  மொத்தமாக இரு அணிகளும் 105 போட்டிகளில் ஆடி 33ல் இந்தியாவும், 48ல் நெதர்லாந்தும் வென்றுள்ளன. 

இந்தப் போட்டி குறித்து பேசிய இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங் ''முந்தைய ஆட்டங்களை பார்த்தால் நெதர்லாந்து எங்களுடன் சிறப்பான ஆடியுள்ளது. ஆனால் அவர்களுடன் சமீபகாலமாக நாங்கள் சிறப்பாக் ஆடி அவர்களுக்கு சோதனை அளித்து வருகிறோம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்கள் நோக்கம்'' என்றார்.

முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியா 12 கோல் அடித்துள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது. நெதர்லாந்து 18 கோல் அடித்துள்ளது. 5 கோல் வாங்கியுள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி
Advertisement