உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!

Updated: 13 December 2018 21:26 IST

நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது. ஒன்று ட்ரா ஆகியுள்ளது

Hockey World Cup 2018, India vs Netherlands Highlights: India Knocked Out, Lose To Netherlands In Quarterfinal
© Twitter

43 வருட கனவாக இருக்கும் உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் கனவை நிறைவேற்றும் முனைப்புடன் இந்தியா புவனேஷ்வரில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற‌ காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது. 1975ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆடியதே இந்தியாவின் சிறப்பான முன்னேற்றமாகும். நெதர்லாந்து உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவுடன் மோதிய 6 ஆட்டங்களில் ஐந்தில் வென்றுள்ளது. ஒன்று ட்ரா ஆகியுள்ளது.

தற்போது தரவரிசையில் நெதர்லாந்து 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளது. கடைசியாக இரு அணிகளும் சாம்பியன் கோப்பை போட்டியில் மோதின. அந்தப் போட்டி 1-1 என்ற கணக்கில் ட்ரா ஆனது. மொத்தமாக இரு அணிகளும் 105 போட்டிகளில் ஆடி 33ல் இந்தியாவும், 48ல் நெதர்லாந்தும் வென்றுள்ளன.

முதல் கால் பகுதியில் இந்தியாவும், நெதர்லாந்தும் ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது மற்றும் மூன்றாவது கால் பகுதியில் கோல் எதுவும் இல்லாமல் முடிவடைந்தன. நான்காவது கால் பகுதியில் ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் நெதர்லாந்து கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 54வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு வீணடிக்கப்பட்டது.

இதன் மூலம் இந்தியா காலிறுதி போட்டியை 2-1 என்ற கணக்கில் தோற்றது. அதோடு 43 வருட உலகக் கோப்பை பயணம் இந்த தொடரில் முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் வென்ற நெதர்லாந்து அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியா 12 கோல் அடித்துள்ளது. 3 கோல் வாங்கியிருந்தது. நெதர்லாந்து 18 கோல் அடித்துள்ளது. 5 கோல் வாங்கியிருந்தது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: இங்கிலாந்துடன் மோதும் ஆப்கானிஸ்தான்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
உலகக் கோப்பை 2019: மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் பங்களாதேஷ்! #ScoreCard
World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!!  #ScoreCard
World Cup: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!! #ScoreCard
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
உலகக் கோப்பை 2019: அதிரடி இங்கிலாந்தை சமாளிக்குமா மேற்கிந்திய தீவுகள்!
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
உலகக் கோப்பை 2019: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-நியூசிலாந்து போட்டி!
Advertisement