
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா சர்வதேச தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியிடன் மோதியது. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி 2-2 என்ற கணக்கில் ட்ராவில் முடிவடைந்தது.
இந்திய அணி ஆட்டத்தை நிதானமாகவே ஆரம்பித்தது. இதை பயன்படுத்திக்கொண்ட பெல்ஜியம் 8வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. முதல் கால் பகுதியில் பெல்ஜியம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது கால் பகுதியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆனால் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. முதல் பாதியில் 1-0 என்ற நிலையில் இந்தியா பின்தங்கி இருந்தது.
ஹர்மன்ப்ரித் சிங் 39வது நிமிடத்தில் கோல் அடித்து சமநிலை பெற வைத்தார். மூன்றாவது கால் பகுதியிலேயே ஆட்டத்தின் 47வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் கோல் அடிக்க 3வது கால் பகுதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
கடைசி கால் பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. பெல்ஜியத்தின் சைமன் ஆட்டம் முடிய சிறுது நேரமெ இருக்கும் போது கோல் அடித்து 2-2 என்ற சமன் செய்தார். கடைசி நொடி வரை இரண்டு அணிகளும் கோல் அடிக்க போராடின.
இந்த வார ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவை 5-0 என்று வீழ்த்தியிருந்த இந்தியா சி பிரிவில் முன்னிலை வகிக்கிறது. இந்த பிரிவின் இந்தியா டிசம்பர் 8ம் தேதி கனடாவை சந்திக்கிறது.