உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி

Updated: 08 December 2018 22:30 IST

5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது இந்திய அணி

Hockey World Cup 2018: India Crush Canada 5-1 To Secure Quarterfinal Berth
லலித் உபாத்யாய் 2 கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார் © Hockey World Cup

உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டியில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் காலிறுதிக்குள் இந்திய அணி நுழைந்துள்ளது.

சி பிரிவில்  நடைபெற்ற போட்டியில்  இந்திய அணி கனடாவை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே பந்து இந்திய அணியின் கன்ட்ரோலில்தான் இருந்தது. எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் கனடாவால் கோல் அடிக்க முடியவில்லை. 12-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலமாக ஹர்மன்பிரீத் கோல் தட்டினார். 

முதல்பாதியில்  இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் கனடாவின் ஃப்ளோரிஸ் வான் சன் ஒரு கோலை அடித்தார். இதையடுத்து 1-1 என்ற கணக்கில் இரு  அணிகளும் சமநிலை  வகித்தன.

இதன்பின்னர் ஆட்டத்தின் முழு கட்டுப்பாடும் இந்திய அணி வீரர்கள்  வசம் வந்தது.
ஆட்டத்தின் 47 மற்றும் 57-வது நிமிடங்களில் இந்திய வீரர் லலித் உபாத்யாய் 2 கோல்களை அடித்தார். இதேபோன்று சிங்கல்சனா சிங், அமித் ரோகிதாசும் ஆளுக்கொரு  கோல்களை விரட்ட 5-1 என்ற கணக்கில் இந்திய அணி கனடாவை வென்றது. 

வியாழன் அன்று நடைபெறும் காலிறுதியில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் இந்தியாவுடன் மோதும் அணி இன்னும் முடிவாகவில்லை. 
 
Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?

Advertisement