ஹாக்கி உலகக் கோப்பை தீம் பாடலில் ரஹ்மான் மற்றும் ஷாருக்!

Updated: 20 November 2018 16:28 IST

நவம்பர் 28ம் தேதி துவங்கவுள்ள இந்தத் தொடருக்கான தீம் பாடலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ளார். இதற்கான டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Hockey World Cup 2018: AR Rahman Tweets Teaser Of Theme Song Featuring Shah Rukh Khan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்த டீஸரில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழத்தியுள்ளது.  © YouTube

2018ம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பை புவனேஷ்வரில் துவங்கவுள்ளது. நவம்பர் 28ம் தேதி துவங்கவுள்ள இந்தத் தொடருக்கான தீம் பாடலை ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ளார். இதற்கான டீஸரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்தப் பாடலுக்கு பாலிவுட் பாடலாசிரியர் குல்சார், ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்த டீஸரில் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்னாயக் இந்தப் பாடலை ஏ.ஆர் . ரஹ்மான் தான் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

மேலும் உலக ஹாக்கி ரசிகர்கள் இந்தியாவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். துவக்க விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டு பாடுகிறார். நவம்பர் 28 துவங்கும் இந்த போட்டி டிசம்பர் 15 வரை நடைபெறும் இதில் 16 நாடுகள் கலந்து கொள்கின்றன. 

இந்தியா இடம்பெற்றிருக்கும் சி பிரிவில் பெல்ஜியம், கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  இந்தியா நவம்பர் 28, டிசம்பர் 2, டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் முறையே தென்னாப்பிரிக்கா,பெல்ஜியம், கனடா  ஆகிய நாடுகளை சந்திக்கிறது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி
Advertisement