இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!

Updated: 09 April 2019 16:18 IST

2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக கிரகாம் நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கிரகாம் முக்கிய பங்கு வகித்தார்.

Graham Reid Appointed Indian Men
1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற அணியில் கிரகாம் இடம் பெற்றிருந்தார் © Hockey India

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புது பயிற்சியாளராக கிரகாம் ரெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். 54 வயதான கிரகாம், ஆஸ்திரேலியாவின் ஹாக்கி அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தார். 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ஆஸ்திரேலியா அணியில் கிரகாம் இடம் பெற்றிருந்தார்.

மேலும் 1984,1985 மற்றும் 1989,1990 ஆண்டுகளில் சாம்பியன்ஸ் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியிலும் கிரகாம் இடம் பெற்றிருந்தார். ஆஸ்திரேலியா அணிக்காக இதுவரை 130 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக கிரகாம் நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் கோப்பை வெல்ல கிரகாம் முக்கிய பங்கு வகித்தார்.

கிரகாமின் பயிற்சியில் ஆஸ்திரேலியா அணி உலக லீக் அரையிறுதியும் உலக லீக் தொடரையும் வென்றது. 2017 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்தாம் கிளப்பின் பயிற்சியாளராக பதவியேற்றார் கிரகாம்.

‘கிரகாம், வீரராக சிறந்து விளங்கியதோடு பயிற்சியாளராகவும் அதிக அனுபவம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளராகவும் திகழ்ந்துள்ளார். அவரது பயிற்சியில் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அணி சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறேன்' என ஹாக்கி இந்தியாவின் தலைவரான முகமது முஸ்தக்யூ அகமது தெரிவித்தார்.

‘இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது எனக்கு பெருமையாக உள்ளது. உலகில் வேறு எந்த நாட்டின் ஹாக்கி அணியையும் இந்தியா ஹாக்கி அணியுடன் ஒப்பிட முடியாது. ஆஸ்திரேலியா அணியை போன்று விரைவாக விளையாடும் திறன் உடையது இந்தியா ஹாக்கி அணி. ஹாக்கி இந்தியா, எஸ்ஏஐ, எம்வைஏஎஸ், இந்தியா ஹாக்கி வீரர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன்' என கிரகாம் தெரிவித்தார்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்தியா ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக கிரகாம் நியமிக்கப்பட்டார்
  • ஆஸ்திரேலியா அணிக்காக வீரராகவும் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் கிரகாம்
  • கிரகாமின் பயிற்சியில் ஆஸ்திரேலியா அணி உலக லீக் தொடரை வென்றது
தொடர்புடைய கட்டுரைகள்
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
இந்திய ஹாக்கி அணிக்கு புது பயிற்சியாளர் நியமனம்...!!!
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
ஹாக்கி வரலாற்றில் வித்தியாசமான பெனால்டி அடித்து அசத்திய தென்கொரிய கேப்டன்
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் காலிறுதியில் போராடி தோற்றது இந்தியா!
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக் கோப்பை ஹாக்கி: பலம் வாய்ந்த நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா?
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது  இந்திய அணி
உலகக்கோப்பை ஹாக்கி: கனடாவை விரட்டியடித்து காலிறுதிக்கு சென்றது இந்திய அணி
Advertisement