மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்

Updated: 02 July 2019 12:04 IST

9 கிராண்பிரிக்ஸ்களுக்கு பிறகு முதலிடத்தில் 197 புள்ளிகளுடன் லூயிஸ் ஹாமில்டன் உள்ளார்

Max Verstappen Wins Austrian GP To End Mercedes Run But Stewards Investigate
ஃபார்முலா 1 யில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தார் வெர்ஸ்தபின் © AFP

21 கிராண்ட் பிரிக்ஸ்களை கொண்ட 2019 ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 9 வது கிராண்ட்பிரிக்ஸான ஆஸ்திரியன் கிராண்ட் பிரிக்ஸ் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த சீசன் இதுவரை நடைபெற்ற 8 கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகளில் ஆறு முறை மெர்சிடிஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றிருந்தார். இரண்டு முறை மெர்சிடிஸ் அணியின் வால்டேரி போட்டாஸ் வெற்றி பெற்றிருந்தார்,

ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸில் ரெட்புல் அணியின் 21 வயதான மாக்ஸ் வெர்ஸ்தபின் வெற்றி பெற்று அசத்தினார். கடைசி இரண்டு லாப்களில் அவர் பெராரியின் சார்லஸ் லெக்லேர்க்கை முந்தி முதலிடம் பிடித்தார். இருப்பினும் அவர் சார்லஸை முந்தியது சர்ச்சையான முறையாக உள்ளதாக கருதி அதனை விசாரிக்க உள்ளனர்.

இரண்டாவதாக பெராரியின் சார்லஸும் மூன்றாவதாக மெர்சிடிஸ் அணியின் போட்டாஸும் வந்தனர். மற்றொரு பெராரி வீரர் வெட்டல் நான்காவதாகவும் மெர்சிடிஸ் வீரரும் நடப்பு சாம்பியனுமான ஹாமில்டன் ஐந்தாவதாகவும் வந்தனர்.

நோரிஸ், கஸ்லி, செயின்ஸ், கிமி, ஜியோவினாசி ஆகியோர் முறையே ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது இடத்தை அடைந்தனர்.

‘போட்டி துவங்கிய பின் எனது ஆட்டம் முடிந்தது என தான் நினைத்தேன். ஆனால் அதன் பின் சிறப்பாக செயல்பட்டோம்' என வெர்ஸ்தபின் தெரிவித்தார்.

9 கிராண்பிரிக்ஸ்களுக்கு பிறகு முதலிடத்தில் 197 புள்ளிகளுடன் லூயிஸ் ஹாமில்டன் உள்ளார். அவரை தொடர்ந்து 166 புள்ளிகளுடன் போட்டாஸ் இரண்டாவது இடத்திலும் 126 புள்ளிகளுடன் வெர்ஸ்தபின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். அடுத்த கிராண்ட்பிரிக்ஸான பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் ஜூலை 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • நடைபெற்ற 8 கிராண்ட்பிரிக்ஸ்களில் ஆறு முறை ஹாமில்டன் வெற்றி பெற்றார்
  • இரண்டாவதாக பெராரியின் சார்லஸும் மூன்றாவதாக போட்டாஸும் வந்தனர்
  • பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் ஜூலை 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தொடர்புடைய கட்டுரைகள்
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் ரெட் புல் ஒப்பந்தத்தை 2023 வரை நீட்டித்துள்ளார்!
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
Advertisement