ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!

Updated: 30 November 2018 21:25 IST

ஃபார்முலா ஒன் ரேஸர் மைக்கேல் சூமேக்கரின் மகன் மிக் சூமேக்கர் அடுத்த சீசனில் பார்முலா 2 பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்

Michael Schumacher
மிக் சூமேக்கர் பார்முலா 2 பந்தையத்தை விட்டு 2019 பார்முலா ஒன் பந்தயத்தில் கலந்து கொள்வார் என்று வதந்தி பரவியது. © Facebook/Mich Schumacher

உலகின் முன்னணி ஃபார்முலா ஒன் ரேஸர் மைக்கேல் சூமேக்கரின் மகன் மிக் சூமேக்கர் அடுத்த சீசனில் பார்முலா 2 பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு நடுவே மிக் சூமேக்கர் பார்முலா 2 பந்தையத்தை விட்டு 2019 பார்முலா ஒன் பந்தயத்தில் கலந்து கொள்வார் என்று செய்தி வெளியானது.

இந்தச் செய்திகளை மறுத்துள்ள மிக் ''நான் படிப்படியாக செல்வதையே விரும்புகிறேன். அது தான் சரியான அனுபவத்தை தரும்'' என்று கூறியுள்ளார். 19 வயதான இவர் 3 ஐரோப்பிய பட்டங்களை வென்ற பின் தான் இந்த ஃபார்முலா ஒன் செய்திகள் பரவின. ஆனால் தான் ஒருநாள் ஃபார்முலா ஒன் ஓடுதளத்தில் ரேஸில் இருப்பேன்" என்று நம்பிக்கையுடன் மிக் தெரிவித்துள்ளார். 

எஃப்3  தொடரின் 5 தொடர் வெற்றிகளை பதிவு செய்தார் மிக் சூமேக்கர், இவரைப்பற்றி உலக சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் தெரிவிக்கும் போது ''இவர் நிச்சயமாக இன்னொரு ஷூமேக்கராக ஜெலிப்பார்'' என்றார்.

எனது தந்தையுடன் என்னை ஒப்பிடுவதை நான் பெருமையாக கருதுகிறேன். நான் மட்டுமல்ல பல ரேஸர்கள் தங்களை தந்தையுடன் ஒப்பிட்டுக் கொள்வதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் தான் என் ரோல்மாடல் என்று மிக் தெரிவித்தார். 

49 வயதான மைக்கேல் சூமேக்கர், டிசம்பர் 29, 2013 நடந்த மோசமான விபத்தில் சிக்கி தற்போது நினைவின்றி  சிகிச்சையில் இருந்து வருகிறார். 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Advertisement