Listen to the latest songs, only on JioSaavn.com
 

விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!

Updated: 23 November 2018 12:59 IST

2013ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி மிக மோசமான விபத்தில் சிக்கி நினைவிழந்த மைக்கேல் சூமேக்கர், இப்போது உடல் நலம் தேறிவருகிறார்.

Michael Schumachers Family Releases Interview Shot Before 2013 Skiing Accident - Watch
இப்போது மைக்கேல் சூமேக்கர் உடல் நலம் தேறிவருகிறார் என்ற தகவல் வெளியாகின்றன. © AFP

ஃபார்முலா ஒன் பந்தயத்தின் நட்சத்திர வீரரான மைக்கேல் சூமேக்கர் 2013ம் ஆன்டு டிசம்பர் 29ம் தேதி மிக மோசமான விபத்தில் சிக்கி நினைவிழந்தார். 49 வயதான சூமேக்கர் விபத்து ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியை அவரது குடும்பத்தினர் பகிர்ந்துள்ளனர். இந்தப் பேட்டியில் தனது சாதனைகளுக்கு பின்னால் உள்ள நிகழ்வுகளையும், அதற்கு தன்னை எப்படி தயார் படுத்திக்கொண்டார் என்பதையும் விளக்கியுள்ளார். 

இதில் ஒரு கேள்விக்கு '' சாதனைகள் ஒரு விஷயம் தான், அதற்காக அதீத நம்பிக்கை வைக்கக்கூடாது. கேள்வி கேஎட்டுக்கொண்டே இருக்க வேண்டும் . அது தான் நம்மை வளர்ச்சிய்டைய செய்யும்'' என்று அக்டோபர் 30, 2013ல் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், "தனக்கு எப்போதுமே சிறந்த சாதனையை செய்து விட்டோம் என்று தோணாது. அதற்காக நான் என் வேலையை அதிகம் செய்ய வேண்டும் என்று நினைப்பேன் என்றும், தனது ரோல்மாடல் ஹாக்கினேன்" என்றும் கூறியுள்ளார்.

இந்த வருட ஆரம்பத்து சூமேக்கரின் மனைவி கோரினா தனது வீட்டை மருத்துமனையாக மாற்ற அதிக முதலீடுகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சூமேக்கர், செபாஸ்டியன் வெட்டலுடன் இணைந்து தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். 2015ல் சூமேக்கர் கொஞ்சம் நடக்கிறார் என்றும், 2016ம் ஆன்டு அவரால் நடக்க முடியாது என்றும்  அவரது வழக்கறிஞர் திட்டவட்டமாக அறிவித்தார். இப்போது அவர் உடல் நலம் தேறிவருகிறார் என்ற தகவல் வெளியாகின்றன.

 குடும்பத்தினர் வெளியிட்ட இந்த வீடியோ, அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
ஷூமாக்கரின் நிலை என்ன? - முன்னாள் மேலாளர் பதில்
ஷூமாக்கரின் நிலை என்ன? - முன்னாள் மேலாளர் பதில்
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
சூமேக்கரின் 50வது பிறந்தநாளுக்கு கண்காட்சி அமைக்கும் ஃபெராரி!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
ஃபார்முலா 2 அடுத்த சீஸனில் களமிறங்கும் சூமேக்கர் மகன்!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விபத்துக்கு முன் சூமேக்கர் அளித்த பேட்டி: ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Advertisement