புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!

Updated: 14 May 2019 14:24 IST

அரியவகை எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஹாரி, மிகப்பெரிய ஃபார்முலா ஒன் ரசிகர். ஹாரி முதல்முறையாக மூன்று வாரங்களில் வெளியில் அழைத்து வரப்பட்டார்.

Lewis Hamilton
ஹாரி வீட்டின் வெளியில் மெர்சிடிஸ் கார் நிறுத்தி வைக்கப்படுள்ளது. © Twitter

அரியவகை எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஹாரி, மிகப்பெரிய ஃபார்முலா ஒன் ரசிகர். ஹாரி முதல்முறையாக மூன்று வாரங்களில் வெளியில் அழைத்து வரப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்றுவரும் ஹாரி வெளியில் வருவதே அப்பூர்வமாகியுள்ளது.

இந்நிலையில் ஹாமில்டனின் ரசிகராக உள்ள ஹாரிக்கு, ஹாமில்டன் பார்சிலானோ போட்டியில் வென்ற கோப்பை அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அதோடு இரண்டு ரேஸிங் க்ளவுஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டன.  ஹாமில்டனும் ஹாரிக்காக வீடியோ பதிவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஹாரியின் தந்தை ஜேம்ஸ் ஷா கூறும்போது '' லீவிஸ் ஹாமில்டனை வார்த்தைகளால் பாராட்டமுடியாது. அவர் செய்த செயல் ஹாரிக்கு அதிக தன்னம்பிக்கையை தந்துள்ளது'' என்றார்.

ஹாரியின் முகத்தில் தன்னம்பிக்கையையும், சிரிப்பையும் பார்ப்பதாக கூறினார். 

ஹாரிக்கு ஹாமில்டன் அவனை பற்றி பேசுவார் என்பது தெரியாது. அதோடு தனக்கு வெற்றியை பரிசளிப்பார் என்பதும் தெரியாது. அது தெரியந்ததும் ஹாரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 5 வயதான ஹாரி தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார்.

ஹாரிக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் வீட்டின் வெளியில் மெர்சிடிஸ் கார் நிறுத்தி வைக்கப்படுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஹாரியின் துயரமான நாட்களில் மகிழ்ச்சி சேர்த்துள்ளது.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
லூயிஸ் ஹாமில்டன் 2019 தனக்கு "சிறந்த ஆண்டு" என்று கூறியுள்ளார்!
லூயிஸ் ஹாமில்டன் 2019 தனக்கு "சிறந்த ஆண்டு" என்று கூறியுள்ளார்!
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
Advertisement