எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்

Updated: 14 February 2019 16:56 IST

தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த மார்க்ஸ் ரெட்புல் காரின் டிசைனும் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

Max Verstappen "Very Positive" After Testing New Red Bull Car At Silverstone
இந்த ஆண்டு ஹோண்டாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ரெட்புல் அணி © Twitter: @redbullracing

2019 ஆண்டிற்கான ஃபார்முலா 1 பந்தயம் வரும் மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள் தங்களது பயிற்சியை துவங்கி விட்டனர்.

இந்த ஆண்டு பட்டம் வெல்ல ஹாமில்டன் மற்றும் மாக்ஸ் வெர்ஸ்டாபின் இடையே தான் கடுமையான போட்டி நிலவும் என விளையாட்டு வல்லுநர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

ரெட் புல் அணிக்காக மார்க்ஸ் பங்கேற்கிறார். தனது ரெட் புல் காரை ஓட்டிப்பார்த்த மார்க்ஸ், காரின் பெர்பார்மன்ஸ் திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ரினால்ட்டுடன் ஒப்பந்தம் வைத்திருந்த ரெட் புல் அணி, இந்த வருடம் ஹோண்டாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

‘ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இன்ஜின் செயல்பாடு மிக சிறப்பாக உள்ளது. இந்த வருடம் எனது சிறந்த வருடமாக இருக்கும்' என மார்க்ஸ் தெரிவித்தார்.

இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த மார்க்ஸ் ரெட்புல் காரின் டிசைனும் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார்.

இந்த ஆண்டு டாப் ஃபார்மில் இருக்கும் ஹாமில்டன், பெராரியின் வெட்டல் மற்றும் ரெட்புல் அணியின் மார்க்ஸ் இடையே கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

மேலும் முதல் முறையாக தங்களது இன்ஜின்களுக்காக ஹோண்டா கூட ஒப்பந்தம் போட்டிருக்கும் ரெட்புல் அணியின் செயல்பாடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

(With AFP Inputs)

Comments
ஹைலைட்ஸ்
  • தன் சந்தோசத்தை ட்வீடரில் மார்க்ஸ் பகிர்ந்தார்
  • இந்த ஆண்டு ஹோண்டாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது ரெட்புல்
  • ஹாமில்டன், வெட்டல், மார்க்ஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும்
தொடர்புடைய கட்டுரைகள்
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ்: ஆஸ்திரேலிய ரெட்புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ வெற்றி
மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ்: ஆஸ்திரேலிய ரெட்புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ வெற்றி
Advertisement