பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்

Updated: 26 November 2018 13:48 IST

ஹாமில்டனின் வேகத்தில் நிகோ ஹல்கென்பெர்க் விபத்திலிருந்து தப்பினார். நேரடியாக மோதாமல் பக்கவாட்டில் உள்ள தடைகளில் மோதி காயமின்றி தப்பித்தார். 

Abu Dhabi Grand Prix: Lewis Hamilton Wins In Fernando Alonso
அபுதாபியில் நடைபெற்ற க்ராண்ட்ப்ரிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் 5 முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹாமில்டன் பட்டம் வென்றுள்ளார். © AFP

அபுதாபியில் நடைபெற்ற க்ராண்ட்ப்ரிக்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் 5 முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற லீவிஸ் ஹாமில்டன் பட்டம் வென்றுள்ளார். 33 வயதான இவர் 83வது நிலையிலிருந்து ஆரம்பித்தாலும், 2.5 நொடிகள் இடைவெளியில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் வெட்டலை வீழ்த்தி பட்டம் வென்றார். 

இந்த க்ராண்ட்ப்ரிக்ஸ் இன்னோரு சிறப்பான தருணத்தையும் கொண்டிருந்தது. இது 2 முறை சாம்பியன் பட்டம் பெற்ற  பெர்ணான்டோ அலோன்சாவின் கடைசி பந்தயமாகும். இந்தத் தொடரோடு ஓய்வை அறிவித்துள்ள பெர்ணாண்டோ, 11வது இடம் பிடித்தார்.

ஹாமில்டனின் இந்தப் பந்தயத்தை அதிரடியான முதல் சுற்றுடன் ஆரம்பித்தார். இவரது வேகத்தில் நிகோ ஹல்கென்பெர்க் விபத்திலிருந்து தப்பினார். நேரடியாக மோதாமல் பக்கவாட்டில் உள்ள தடைகளில் மோதி காயமின்றி தப்பித்தார். 

ஆட்டம் முழுவதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹாமில்டன் ''இந்த தருணம் மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த வருடம் வெட்டல் இன்னும் வலிமையாக திரும்பி வருவார் அதற்கு என்னை நான் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார்.

வெட்டல் '' ஹாமில்டன் சாம்பியன் பட்டத்துக்கு தகுதியானவர். நான் கடைசி சுற்று வரை அவரை வீழ்த்த போராடினேன்'' என்று தெரிவித்தார். டச்சு வீரர் மேக்ஸ் வெர்ட்ஸப்பன் 13 நொடிகள் பின் தங்கி 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
பெர்ணான்டோவின் ஃபேர்வல்: க்ராண்ட்பிரிக்ஸில் பட்டம் வென்றார் ஹாமில்டன்
Advertisement