1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!

Updated: 14 April 2019 19:53 IST

நாளின் சிறந்த டிரைவராக ஆல்பான் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டின் நான்காவது பார்முலா 1 கிராண்ட்பிரிக்ஸ் அசர்பைஜானில் நடைப்பெறவுள்ளது.

Dominant Lewis Hamilton Wins 1,000th Race In Mercedes One-Two
போட்டாஸை விட ஆறு புள்ளிகள் கூட பெற்றுள்ளார் ஹாமில்டன் © AFP

பார்முலா 1 –யின் 1000 வது கிராண்ட்பிரிக்ஸ் சீனாவில் நடந்தது. சீனாவின் சான்காயில் நடந்த கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் லூயிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.

இந்த கிராண்ட்பிரிக்ஸில் இரண்டாவது இடத்தில் இருந்து துவங்கிய ஹாமில்டன், தன் சக அணிவீரரான வால்ட்டாரி போட்டாஸை பின்னுக்கு தள்ளி சாம்பியன் ஆனார்.

இரண்டாவது இடத்தை போட்டாஸும் மூன்றாவது இடத்தை பெராரியின் செபாஸ்டின்  வெட்டலும் பிடித்தனர். மற்றொரு பெராரி வீரரான சார்லஸ் லெக்லெர்க் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.

ஹாமில்டன் வெல்லும் 75 –வது கிராண்ட்பிரிக்ஸ் இதுவாகும். சீனா கிராண்ட்பிரிக்ஸை ஆறாவது முறையாக ஹாமில்டன் வென்றார்.

‘வாரயிறுதி கடினமாக தான் இருந்தது. ஆனால் இந்த கிராண்ட்பிரிக்ஸில் துவக்கம் சிறப்பாக இருந்தது. அதுவே வெற்றியை தீர்மானித்தது' என வெற்றியை குறித்து ஹாமில்டன் தெரிவித்தார்.

போட்டாஸை விட ஹாமில்டன் ஆறு புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ளார். ‘மெர்சிடிஸ் அணியின் துவக்கம் சிறப்ப்பாக இருந்தது' என வெட்டல் தெரிவித்தார்.

2019 –யில் முதல் முறையாக இந்த கிராண்ட்பிரிக்ஸில் தான் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றார் வெட்டல்.

நாளின் சிறந்த டிரைவராக ஆல்பான் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டின் நான்காவது பார்முலா 1 கிராண்ட்பிரிக்ஸ் அசர்பைஜானில் நடைப்பெறவுள்ளது.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த ஆண்டின் மூன்றாவது கிராண்ட்பிரிக்ஸ் இதுவாகும்
  • முதல் இரண்டு இடங்களை மெர்சிடிஸ் வீரர்களே பிடித்தனர்
  • வெட்டல் மூன்றாவது இடத்தை பிடித்தார்
தொடர்புடைய கட்டுரைகள்
லூயிஸ் ஹாமில்டன் 2019 தனக்கு "சிறந்த ஆண்டு" என்று கூறியுள்ளார்!
லூயிஸ் ஹாமில்டன் 2019 தனக்கு "சிறந்த ஆண்டு" என்று கூறியுள்ளார்!
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
Advertisement