பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: "பெண்களை போன்று அழுதால்" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்

Updated: 17 July 2018 16:29 IST

கிமி ரெய்ன்கோனனை மோதிய பிறகு, ஹாமில்டன் கண்ணீர் வடித்ததை குறித்து ரெயின்கோனனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Kimi Raikkonen
© Instagram

பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியின் போது, முதல் சுற்றில் மெர்சிடஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டனும், ஃபெராரியின் கிமி ரெய்ன்கோனனும் மோதி கொண்டனர். இதனால். பின்னடைவு அடைந்த இரு வீரர்கள் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டனர்.

கிமி ரெய்ன்கோனனை மோதிய பிறகு, ஹாமில்டன் கண்ணீர் வடித்ததை குறித்து ரெயின்கோனனின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தன் கணவரின் வழியை சேதமடைய செய்ததால், "பெண்களை போன்று அழுதால்.." என்று ஹாமில்டன் குறித்து மிண்டு ரெய்ன்கோனன் பதிவிட்டிருந்தார்.

பின்னர், தனது தவறை உணர்ந்த ஹாமில்டன், அவருக்கு எதிராக வரும் கருத்துக்களை ஒப்பு கொள்வதாக தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் இப்படியான விபத்துகள் ஏற்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

go5bjdt9sbp

இது குறித்து பேசிய மெர்சிடஸ் அணி தலைவர் டோட்டோ வுல்ப், இந்த விபத்து தவறுதலாக நடைப்பெற்றது, திட்டமிட்டு செய்யப்பட்ட விபதில்லை என்று தெரிவித்துள்ளார். 
    
பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ் முதல் சுற்றில் ஏற்பட்ட விபத்தால், போட்டி முடிவில் மெர்சிடஸ் அணியின் லூயிஸ் ஹாமில்டன் இரண்டாம் இடத்தையும், ஃபெராரியின் கிம் ரெய்ன்கோனன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்ட் ப்ரிக்ஸ் கோப்பையை ஃபெராரியின் செபஸ்டின் வெட்டல் கைப்பற்றினார்.


 

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்
2019 ஃபார்முலா ஒன் ஒப்பந்தம்: ஃபெராரியில் இருந்து ரெயின்கோனன் நீக்கப்படலாம்
பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: "பெண்களை போன்று அழுதால்" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்
பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரிக்ஸ்: "பெண்களை போன்று அழுதால்" என ஹாமில்டனை குறிவைத்த ரெய்ன்கோனன்
Advertisement