
2019 ஆம் ஆண்டிற்கான ஃபார்முலா ஒன் கார் பந்தைய வீரர்களின் ஒப்பந்தம் புதுபித்தல் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
முன்னணி வீரர் கிமி ரெயின்கோனன் ஃபெராரி அணியை விட்டு விலகுகிறார் என்ற செய்திகள் வெளிவந்தன. எனினும், அந்த செய்தியை ஃபெராரி நிறுவனம் மறுத்துள்ளது.
பிரபல ஃபார்முலா ஒன் வீரர்கள் லூயிஸ் ஹாமில்டன், வால்டேரி பொட்டாஸ் ஆகியோரை மெர்சிடஸ் அணி தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு போட்டிகளில் லெக்லெர்க் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே, ஃபெராரி அணியில் அவர் இடம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"சிறந்த வீரர்களையே ஃபெராரி அணி தேர்வு செய்யும். சிறப்பாக செயல்படாத வீரர்களை எடுக்க முடியாது. அடுத்த ஆண்டிற்கான ஃபெராரி அணியில் திறமை வாய்ந்த வீரர்களே விளையாட வேண்டும்" என்று அணி தலைவர் ப்ரெட் வசியூர் தெரிவித்துள்ளார்.
2007 - ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ரெயின்கோனன், தனது அறிமுக ஃபார்முலா ஒன் போட்டியை சாபர் அணியுடன் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 20 வயதே ஆன லெக்லெர்க், சிறப்பாக செயல்பட்டு வருவதால், ஃபெராரி அணியில் இடம் பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மற்றொரு வீரரான லான்ஸ் ஸ்ட்ரால், வில்லியம்ஸ் அணியில் இருந்து ஃபோர்ஸ் இந்தியா அணிக்கு இடம் மாறியுள்ளார். வில்லியம்ஸ் அணியுடன், லான்ஸ் சிறப்பாக செயல்படாததே இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.