Listen to the latest songs, only on JioSaavn.com
 

Japanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....!

Updated: 15 October 2019 17:11 IST

இதற்கு முன்பு 1999 முதல் 2004 வரை தொடர்ச்சியாக ஆறு முறை பெராரி அணி வென்றது தான் சாதனையாக இருந்தது.

Japanese GP: Valtteri Bottas Wins, Mercedes Clinch Record Constructors Title
முதலிடத்தை போட்டாஸும் இரண்டாம் இடத்தை வெட்டலும் பிடித்தனர் © AFP

இந்த ஆண்டின் 17 வது ஃபார்முலா 1 கிராண்ட்பிரிக்ஸான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் நேற்று நடைபெற்றது. இதில் மெர்சிடிஸ் அணியின் போட்டாஸ் முதலிடம் பெற்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பெராரி அணியின் வெட்டல் பெற்றார். நடப்பு ஃபார்முலா 1 சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

டைப்பூன் ஹகிபீஸ் காரணமாக நேற்று தான் தகுதி சுற்றும் நடைபெற்றது. இந்த தகுதி சுற்றில் பெராரி அணியின் வெட்டல் – சார்லஸ் இணை முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.

கிராண்ட்பிரிக்ஸ் ரேஸில் வெட்டலை பின்னுக்கு தள்ளினார் போட்டாஸ். ‘அது என் தவறு தான். போட்டியில் எங்களை விட மெர்சிடிஸ் அணிக்கு வேகம் அதிகமாக இருந்தது. இரண்டாம் இடத்தை தக்க வைத்தது கடினம் தான்' என்றார் வெட்டல்.

போட்டியில் ரெட் புல் அணியின் வெர்ஸ்டாபன் காரின் மீது பெராரியின் சார்லஸ் கார் மோதியது. இதனால் பெராரி அணியின் சார்லஸ் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்த கிராண்ட்பிரிக்ஸில் 17வது லாப்பில் தனது சக்கரத்தை மாற்றினார் வெட்டல். அவரை தொடர்ந்து போட்டாஸும் தனது சக்கரத்தை மாற்றினார். போட்டியின் 22 வது லாப்பில் தான் லூயிஸ் ஹாமில்டன் தனது சக்கரத்தை மாற்றினார்.

இந்த கிராண்ட்பிரிஸில் லாப் சாதனை லூயிஸ் ஹாமில்டனிடம் இருந்தாலும் அவரால் வெட்டலை பின்னுக்கு தள்ள முடியவில்லை.

முதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை மெர்சிடிஸ் வீரர்கள் பெற்றதன் மூலம் இந்த ஆண்டின் தயாரிப்பாளர்கள் சாம்பியன்ஷிப்பை மெர்சிடிஸ் அணி பெற்றது. மெர்சிடிஸ் அணி தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1999 முதல் 2004 வரை தொடர்ச்சியாக ஆறு முறை பெராரி அணி வென்றது தான் சாதனையாக இருந்தது.

இந்த ஆண்டு இன்னும் 4 கிராண்ட்பிரிக்ஸ்கள் உள்ளது. அடுத்த கிராண்ட்பிரிக்ஸ் மெக்சிகோவில் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த ஆண்டும் ஃபார்முலா சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார் லூயிஸ் ஹாமில்டன்.

Comments
ஹைலைட்ஸ்
  • மெர்சிடிஸ் அணி தொடர்ந்து ஆறாவது முறையாக இந்த சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளது
  • முதலிடம் மற்றும் மூன்றாம் இடத்தை மெர்சிடிஸ் வீரர்கள் பெற்றனர்
  • இந்த ஆண்டு இன்னும் 4 கிராண்ட்பிரிக்ஸ்கள் உள்ளது
தொடர்புடைய கட்டுரைகள்
Japanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....!
Japanese GP: போட்டாஸ் வெற்றி....மெர்சிடிஸ் அணி சாம்பியன்....!
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
Advertisement