"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்

Updated: 17 October 2019 10:04 IST

ஃபார்முலா ஒன் உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் புதன்கிழமை ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், மனிதர்கள் விலங்குகளை சாப்பிட்டால் "எங்கள் இனம் அழிந்துபோகும்" என்று கவலைப்படுகிறார்.

Lewis Hamilton Despairs Of World
அடுத்த கிராண்ட் பிரிக்ஸ் அக்டோபர் 27 அன்று மெக்சிகோவில் நடக்கவுள்ளது. © AFP

ஃபார்முலா ஒன் உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன் புதன்கிழமை ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், மனிதர்கள் விலங்குகளை சாப்பிட்டால் "எங்கள் இனம் அழிந்துபோகும்" என்று கவலைப்படுகிறார். "இந்த உலகம் எங்கே போகிறது என்ற சிந்தனையுடன் நான் இப்போது சோகமாக இருக்கிறேன்" என்று ஹாமில்டன் பின்னர் ஒரு பதிவில் எழுதினார். 32 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பிறகு ஆறாவது உலக பட்டத்தை வென்றார். அவர் நான்கு பந்தயங்கள் மீதமுள்ள நிலையில் 64 புள்ளிகளால் மெர்சிடிஸ் அணியின் வீரர் வால்டேரி போடாஸை முந்தியுள்ளார். அடுத்த கிராண்ட் பிரிக்ஸ் அக்டோபர் 27 அன்று மெக்சிகோவில் நடக்கவுள்ளது.

ஐந்து முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் தனது வாசகர்களை "சில ஆராய்ச்சி செய்யுங்கள்", "இரக்கமாக இருங்கள்" மற்றும் "காடு அழிப்பது, விலங்குக் கொடுமை, நமது கடல்கள் மற்றும் காலநிலை சிதைவதைத் தடுக்க" வலியுறுத்தினார்.

"சைவத்துக்கு மாறுங்கள் (Go Vegan), எங்கள் கிரகத்தை உண்மையிலேயே காப்பாற்றுவதற்கான ஒரே வழி இதுதான்" என்று ஹாமில்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார். 

நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன். உலகம் இத்தகைய குழப்பமாக இருக்கும்போது ஏன் கவலைப்பட வேண்டும், மக்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனது எண்ணங்களைச் சேகரிக்க நான் ஒரு கணம் ஒதுக்கப் போகிறேன். உலகைப் பற்றி ஒரு மோசமான நிலையை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி." என்று முடித்தார்.

Comments
தொடர்புடைய கட்டுரைகள்
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
"நான் எல்லாவற்றையும் விட்டுவிடுவது போல் உணர்கிறேன்" - லூயிஸ் ஹாமில்டன்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
புற்றுநோய் தாக்கிய சிறுவனுக்கு பட்டத்தை அர்பணித்த ஹாமில்டன்!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
Advertisement