ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!

Updated: 29 July 2019 12:33 IST

இந்த போட்டியை 20வதாக இருந்து துவங்கிய பெராரியின் செபஸ்டின் வெட்டல் இரண்டாவது இடத்தை பெற்று அசத்தினார்

Max Verstappen Wins Chaotic German Grand Prix
இந்த சீசனில் மாக்ஸ் வெல்லும் இரண்டாவது கிராண்ட்பிரிக்ஸ் இதுவாகும். © AFP

ஃபார்முலா 1 யின் ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸ் நேற்று நடைபெற்றது. மழை நேரத்தில் நடைபெற்ற இந்த கிராண்ட்பிரிக்ஸில் ரெட்புல் அணியின் மாக்ஸ் வெர்ஸ்தபின் வெற்றி பெற்றார். இந்த சீசனில் மாக்ஸ் வெல்லும் இரண்டாவது கிராண்ட்பிரிக்ஸ் இதுவாகும்.

இந்த போட்டியை 20வதாக இருந்து துவங்கிய பெராரியின் செபஸ்டின் வெட்டல் இரண்டாவது இடத்தை பெற்று அசத்தினார். மூன்றாவது இடத்தில் டோரோ ரோசோவின் டேனில் க்குவெயாத் பெற்றார்.

மெர்சிடிஸ் அணிக்கு இந்த கிராண்ட்பிரிக்ஸ் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த ஜெர்மனி கிராண்ட் பிரிக்ஸானது மெர்சிடிஸ் அணியின் மோட்டர்போட்டியில் 125 ஆண்டையும் மார்டன் இராவில் 200வது ஃபார்முலா 1 போட்டியாகும். அந்த அணியின் வீரர்களான லூயிஸ் ஹாமில்டன் மற்றும் போட்டாஸ் ஆகிய இருவரும் புள்ளிகள் பெற தவறினர்.

23 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக கிராண்ட்பிரிக்ஸ் ஒன்றில் புள்ளி குவிக்க தவறினார் ஐந்து முறை சாம்பியனான ஹாமில்டன். இந்த கிராண்ட்பிரிக்ஸில் பல வீரர்கள் கிரிப் கிடைக்காமல் கார்னர்களில் கார்களை மோதி போட்டியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டது.  

‘இந்த போட்டி சிறப்பாக இருந்தது. 360 டிகிரி ஸ்பினையும் தாங்கி கொண்டு வெற்றி பெற்றுள்ளோம்' என்றார் மாக்ஸ்.

சென்ற ஆண்டு இதே கிராண்ட்பிரிக்ஸில் முன்னணியில் இருந்தும் வெட்டல்  விலக நேரிட்டது. இம்முறை அந்த தவறை செய்யாமல் இரண்டாவதாக வந்து அசத்தினார் வெட்டல். ‘நீண்ட போட்டியாக இது இருந்தது. சில இடங்களில் இந்த போட்டி முடியாது என்றே எண்ணினேன்' என்றார் வெட்டல்.

சனிகிழமை தந்தையான டோரோ ரோசோவின் டேனில் கூறுகையில், ‘முதல் மூன்று இடத்தில் வருவது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு டோரோ ரோசோ வெற்றி பெற்றது பெருமையாக உள்ளது' என்றார்.

இந்த போட்டியில் புள்ளிகள் குவிக்க தவறினாலும் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார் ஹாமில்டன்.

Comments
ஹைலைட்ஸ்
  • இந்த கிராண்ட்பிரிக்ஸில் ரெட்புல் அணியின் மாக்ஸ் வெர்ஸ்தபின் வென்றார்
  • மெர்சிடிஸ் அணிக்கு இந்த கிராண்ட்பிரிக்ஸ் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
  • புள்ளிகள் குவிக்க தவறினார் ஐந்து முறை சாம்பியனான ஹாமில்டன்
தொடர்புடைய கட்டுரைகள்
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
ஜெர்மன் கிராண்ட்பிரிக்ஸில் அசத்திய மாக்ஸ், வெட்டல்...!
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
மெர்சிடிஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முடிவு கட்டிய மாக்ஸ்...! ஆஸ்திரியன் கிராண்ட்பிரிக்ஸ் ரிப்போர்ட்
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
1000 வது பார்முலா 1 கிராண்ட்பிக்ஸின் சாம்பியன் ஆனார் ஹாமில்டன்..!!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 1 பந்தயம்
Advertisement