உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்

Updated: 15 June 2018 17:55 IST

Friday's World Cup clash between Portugal and Spain will be their fourth meeting at a major tournament this century.

World Cup, Spain vs Portugal Preview: Spain Start Campaign In Turmoil, Cristiano Ronaldo Leads Portuguese Hopes
© AFP

இன்று நடைபெறும் முக்கிய  ஆட்டத்தில் ஸ்பெயின் அணியும் போர்ச்சுகல் அணியும் மோதுகின்றன. உலகின் பல வாயந்த இரண்டு முக்கிய அணிகள் மோதும் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 கடந்த புதன்கிழமை உலக கோப்பை தொடங்குவதற்கு இரண்டு நாட்களேஇருந்த நிலையில் ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜூலன் லோபெட்டிகு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது அந்த அணிக்கு அதிர்ச்சியைத் தந்தது. போர்ச்சுகல் அணிக்குள்ளும் சிறிது சலசலப்பு நிலவி வருகிறது. அந்த அணியைச் சேர்ந்தநான்கு வீரர்கள் தங்களுடைய ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று ரியல் மேட்ரிட் கிளப்பின் பயிற்சியாளராக ஜூலன் லோபெடிகுய் நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளிவந்தது. ஆனால், ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பு  அதன் பயிற்சியாளர் ஜுலன் நீக்கப்பட்டு ஃபெர்னாண்டோ ஹியர்ரோ புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை உறுதிபடுத்தியது.

”எங்களைப் பற்றி கவலைப்படுவதற்கேல்லாம் நேரமில்லை” எனக் கூறியுள்ளார் புதிய பயிற்சியாளர்  ஹியர்ரோ , ஸ்பெயின் அணியின் விளையாட்டு இயக்குனராக பணியாற்றி வந்த இவர் மேலும் கூறியதாவது “உலக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதுதான் குறிக்கோள். வீர்ர்களும் அதை நோக்கி இரண்டு ஆண்டுகளாக உழைத்து வருகின்றனர்.” என்றார்.

”நமக்கு ஒரு அற்புதமான சவால் ஒன்று இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நம்முடைய கனவுகளிலிருந்து நம்மை திசை திருப்பிவிடக்கூடாது என நான் விளையாட்டு வீரர்களிடம் கூறியிருக்கிறேன்” என்றார்

ஐரோப்பிய சாம்பியனான போர்ச்சுகல் அணி அண்டை நாடான ஸ்பெயின் அணியை எதிர்கொள்கின்ற இந்த தருணத்தில், போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய கேரியரில் எட்டாக்கணியாக உள்ள உலகக் கோப்பை வெற்றியை பெறுவதற்கான இறுதிமுயற்சியை மேற்கொள்வார்.

ஜூலன் லோபெடிகு, ரொனால்டோ விளையாடும் ரியல் மேட்ரிட் கிளப்பின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரியல் மேட்ரிட் கிளப்பின் எதிர்காலம், போர்ச்சுகல் கால்பந்து ஏஜெண்ட் ஜார்கே மெண்டஸ் உடன் இருவருக்கும் உள்ள உறவு இவற்றிக்கெல்லாம் மத்தியில் இந்த நியமனம் பற்றி ரொனால்டோ என்ன நினைத்திருப்பார் என்பது ஆச்சரியமாக உள்ளது.  

இது எல்லாவற்றிற்கும் மத்தியில் ரொனால்டோ கவனம் முழுவதும் இதுவரை போர்ச்சுகல் அணி பெற்றிராத கவுரவமான உலக கோப்பையை வெல்வதில் தான் உள்ளது.

கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக போர்ச்சுகலை, ரொனால்டோவை வைத்து ஊகிப்பது மிகையாக இருக்கலாம், இருப்பினும் போர்ச்சுகல் அணி சொந்த மண்ணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஃபிரான்ஸை வீழ்த்தி நடப்பு ஐரோப்பிய சாம்பியனாக ரஷ்யாவில் விளையாட இருக்கின்றனர்.

ரொனால்டோவிற்கு தற்போது 33 வயதாகியிருந்தாலும் நல்ல உடல் தகுதியுடன் ஃபிரான்ஸ் நாட்டின் நடப்பு பேலான் டி’ஓர் விருது பெற்றவராக இருந்து வருகிறார். அவர் விரும்புகின்ற வரையில் தொடர்ந்து விளையாடலாம், ஆனால் 2022 ஆண்டு கத்தாரில் நடைபெறவிருக்கின்ற உலககோப்பை தொடருக்கு ஐந்தாவது முறையாக விளையாடுவார் என என்னுவது சற்று கடினம் தான்.

ஒரு உலக கோப்பை வெற்றியுடன் தன்னுடைய கேரியரை அவர் முடித்துக் கொள்ள நினைத்தால் அவருக்கு இதுதான் சரியான தருணம், அதுவும் ஒரே பிரிவில் (பி) விளையாடும் அண்டை நாடான ஸ்பெயினை வீழ்த்தி போர்ச்சுகல் அணிக்கு ஒரு வெற்றியை பெற்றுத்தந்து முன்னிலையுடன்தொடங்குவதை விட சிறந்த வழி என்ன இருக்க முடியும்.

”நிச்சயமாக உலகின் தற்போதைய தலைசிறந்த வீரர் ரொனால்டோ தான், இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவர் தான் சிறந்த வீரராக விளங்குவார், அவரைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை” என போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த சக வீரர் ஜோவா மேரியோ கடந்த வாரம் மாஸ்கோவில் கூறியுள்ளார்.

Comments
ஹைலைட்ஸ்
  • Spain and Portugal clash at the Fisht Olympic Stadium on Friday
  • Spain sacked their coach Julen Lopetegui on Wednesday
  • Ronaldo will be key to Portugal's chances in the tournament
தொடர்புடைய கட்டுரைகள்
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
உலகக் கோப்பை 2-ம் நாள்: ஆட்டத்தை மாற்றிய ரொனால்டோவின் அந்த கோல்
உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்
உலகக் கோப்பை 2018: ஸ்பெயின், போர்ச்சுகல் அணிகள் இன்று மோதல்
Advertisement