World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?

Updated: 14 November 2019 16:32 IST

இந்திய நேரத்தில் இந்த போட்டி இரவு 7.30 க்கு நடைபெறும்.

World Cup 2022 Qualifiers: Winless India Face Afghanistan In Crunch Match
ஆப்கானிஸ்தான் எதிராக இந்தியா அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது © Twitter@IndianFootball

2022 கால்பந்து உலகக்கோப்பையின் தகுதி சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது இந்தியா அணி. தனது முதல் மூன்று போட்டியில் இரண்டு டிரா, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது இந்தியா அணி. இந்நிலையில் கட்டாய வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.

தனது பிரிவிலுள்ள 5 அணிகளில் 4 வது இடத்தில் உள்ளது இந்தியா. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் பிரிவின் முதலிடத்தை அடைய வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட களத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. மேலும் அங்கு குளிர் நிலை நீடிக்கும்.

8 முறை ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியுள்ள இந்தியா அணியானது 6 முறை வெற்றி பெற்றுள்ளது. மீது இரண்டு போட்டிகளில் ஒரு டிராவும் ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது இந்தியா.

இந்தியா அணியில் காயம் மற்றும் ஏனைய காரணங்களால் அனாஸ், ரோலின், சந்தேஷ் ஆகியோர் இடம் பெறவில்லை. பங்களாதேஷ் எதிராக 1-1 என டிரா செய்த இந்தியா அணி தரவரிசையில் 106 வது இடத்தில் உள்ளது. அதே நேரம் ஆப்கானிஸ்தான் அணியானது தரவரிசையில் 149 வது இடத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியுள்ள அமிரி ஐஎஸ்எல் தொடரில் எப்சி கோவா அணிக்காக விளையாடியுள்ளார். அவர் இதுவரை 48 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய நேரத்தில் இந்த போட்டி இரவு 7.30 க்கு நடைபெறும்.

Comments
ஹைலைட்ஸ்
  • தனது பிரிவிலுள்ள 5 அணிகளில் 4 வது இடத்தில் உள்ளது இந்தியா
  • . செயற்கையாக உருவாக்கப்பட்ட களத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
  • அமிரி ஐஎஸ்எல் தொடரில் எப்சி கோவா அணிக்காக விளையாடியுள்ளார்
தொடர்புடைய கட்டுரைகள்
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
World Cup Qualifiers: கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா அணி...ஆப்கானிஸ்தானை வீழ்த்துமா?
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
WC 2022 Qualifiers: இந்தியா - வங்காளதேசம் போட்டி டிராவில் முடிந்தது
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
World Cup Qualifiers: முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா?
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
"பயமில்லாமல் ஓமனை எதிர்கொள்வோம்" - கோல்கீப்பர் சந்து நம்பிக்கை
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
ஃபிபா தரவரிசையில் இந்தியா அணிக்கு பின்னடைவு...!
Advertisement